கோவிலை கையகப்படுத்த எதிர்ப்பு: வடலுாரில் 68 பேர் கைது
வடலூர்: வடலுார் அம்மன் கோவிலை அறநிலையத்துறை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்த பக்தர்கள், அரசியல் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்
கடலுார் மாவட்டம், வடலுார் ஆபத்தாரணபுரத்தில் பழமையான பச்சைவாழி அம்மன் கோவில் அமைந்துள்ளது. தனியார் நிர்வாகத்திலுள்ள இக்கோவிலில் முறைகேடுகள் நடப்பதாகவும், கோவிலை அறநிலையத்துறை கையகப்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்தது.
அதையடுத்து, கடந்த ஜூன் 10ம் தேதி, அறநிலையத்துறை சார்பில் கையகப்படுத்தும் பணி நடந்தபோது எதிர்ப்பு எழுந்தது. இதற்கிடையில், கோவிலை நிர்வாகம் செய்பவர்கள் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி , முறைகேடு புகார்கள் நிரூபிக்கப்படாததால் அறநிலையத்துறை தக்கார் நியமித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.
இந்நிலையில் நேற்று காலை, மீண்டும் அறநிலையத்துறை அதிகாரிகள் கோவிலை கையகப்படுத்த சென்றனர். இதற்கு பக்தர்கள், பாஜ., மற்றும் இந்து முன்னணி உள்ளிட்ட அரசியல் அமைப்புக்கள் கோவிலை இழுத்து பூட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். இதை தொடர்ந்த அனைவரும் போலீசார் கைது செய்தனர்.
இதுபற்றி தகவலறிந்த கடலூர் எஸ்பி., ஜெயக்குமார் சம்பவ இடத்திற்கு விரைந்தார். சென்னை ஜகோர்ட் மூலம் உத்தரவு பெற்ற கோவில் நிர்வாகம் போலீசாரிடம் உத்தரவை காண்பித்தனர். இதன் பிறகு அறநிலையத்துறை அதிகாரிகள் கோவிலை விட்டு வெளியேறினர்.
இதற்கிடையில் போலீசாரால் கைது செய்யப்பட்ட பக்தர்கள், பொதுமக்கள், 68 பேரை நேற்று மாலை விடுவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
உண்டியலை எடுத்து விடுங்கள் அறநிலையத்துறை ஓடி விடுவான் இதுவரை அறநிலையத்துறை கட்டிய கோயில்கள் எத்தனைமேலும்
-
பிரதமரை அவமதிக்கும் போதெல்லாம் காங்., துடைத்தெறியப்படும்; அமித் ஷா
-
பிரதமர் குறித்து ராகுலின் கருத்தால் காங்கிரஸ் பின்னடைவை சந்திக்கிறது; கிரண் ரிஜிஜூ
-
முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது; பசும்பொன்னில் மீண்டும் வலியுறுத்திய இபிஎஸ்
-
என்னை அவமரியாதை செய்துவிட்டனர்: பிரதமர் மோடி குற்றச்சாட்டு
-
முத்துராமலிங்க தேவர் பெயரில் ரூ.3 கோடியில் திருமண மண்டபம்; முதல்வர் அறிவிப்பு
-
வெளிநாட்டவருக்கு வேலை அனுமதி வழங்குவதை நிறுத்தியது அமெரிக்கா