ரூ.8 ஆயிரம் கோடி ஈட்டி என்.எல்.சி., புதிய சாதனை: சேர்மன் பிரசன்னகுமார் மோட்டுப்பள்ளி தகவல்
நெய்வேலி: என்.எல்.சி., இந்தியா நிறுவனம், நடப்பு நிதியாண்டின் (2025-26) முதல் அரையாண்டில், ரூ. 8,004 கோடி வருவாய் ஈட்டி புதிய சாதனை படைத்துள்ளது.
என்.எல்.சி., இந்தியா நிறுவன சேர்மன் பிரசன்னகுமார் மோட்டுப்பள்ளி தலைமையில் நடந்த நிதிநிலை குறித்த கூட்டத்தில், நடப்பு நிதியாண்டின் முதல் 6 மாதங்களுக்கான நிதி நிலை முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
அதுகுறித்து சேர்மன் கூறியதாவது:
நடப்பு நிதியாண்டின் (2025-26) முதல் அரையாண்டில் நிலக்கரி உற்பத்தி 74.87 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது, மின்உற்பத்தியை பொறுத்தவரை, 6 மாதங்களில் மொத்த மின் உற்பத்தி 13,375. 87 மில்லியன் யூனிட்டாக உயர்ந்துள்ளது. இதில் 1,126.53 மில்லியன் யூனிட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மின் உற்பத்தியும் அடங்கும்.
நடப்பு நிதியாண்டில், செயல்பாடுகளின் மூலம் கிடைத்த அரையாண்டு வருவாய் ரூ. 8,004 கோடியாக உயர்ந்துள்ளது. வரிக்கு பிந்தைய லாபம் ரூ. 1,564 கோடியாக அதிகரித்துள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில், வட்டி, வரிகள், தேய்மானம் மற்றும் கடனீட்டு நீக்கத்திற்கு முந்தைய வருமானம் ரூ. 3,190 கோடியாக உயர்ந்துள்ளது.
நடப்பாண்டில், கடந்த செப்., 30ம் தேதியுடன் முடிவடைந்த முதல் அரையாண்டு நிலவரப்படி என்.எல்.சி., குழுமத்தின் நிகர மதிப்பு ரூ. 19,965.62 கோடியாக உயர்ந்துள்ளது என்று தெரிவித்தார்.
மேலும்
-
பிரதமரை அவமதிக்கும் போதெல்லாம் காங்., துடைத்தெறியப்படும்; அமித் ஷா
-
பிரதமர் குறித்து ராகுலின் கருத்தால் காங்கிரஸ் பின்னடைவை சந்திக்கிறது; கிரண் ரிஜிஜூ
-
முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது; பசும்பொன்னில் மீண்டும் வலியுறுத்திய இபிஎஸ்
-
என்னை அவமரியாதை செய்துவிட்டனர்: பிரதமர் மோடி குற்றச்சாட்டு
-
முத்துராமலிங்க தேவர் பெயரில் ரூ.3 கோடியில் திருமண மண்டபம்; முதல்வர் அறிவிப்பு
-
வெளிநாட்டவருக்கு வேலை அனுமதி வழங்குவதை நிறுத்தியது அமெரிக்கா