பைனான்சியர் கடத்தல் வழக்கு: மதுரையில் இருவர் கைது
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனுார் அருகே வளத்தியை சேர்ந்தவர் சிவா, 40; பைனான்சியர். இவரை, நேற்று முன்தினம் 7 பேர் கொண்ட கும்பல் காரில் கடத்தி சென்றதோடு, ரூ.4 லட்சம் ரொக்கம் மற்றும் பாஸ்போர்ட், வாட்சுகள் உள்ளிட்ட பொருட்களை பறித்து சென்றது.
தகவலறிந்த விழுப்புரம் மாவட்ட போலீசார் மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டதால், சுதாரித்துக்கொண்ட கடத்தல் கும்பல், சிவா மற்றும் அவரின் காரை விட்டு விட்டு, தப்பிச் சென்றது.
போலீசார் சிவாவை மீட்டதோடு, எஸ்.பி., சரவணன் மேற்பார்வையில், செஞ்சி டி.எஸ்.பி., கந்தசாமி மற்றும் செஞ்சி இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை ஆகியோர் தலைமையில் இரு தனிப்படைகள் அமைக்கப்பட்டு, குற்றவாளிகளை மதுரை, திருநெல்வேலி, துாத்துக்குடி பகுதிகளில் தேடினர்.
இந்நிலையில், சம்பவத்தில் தொடர்புடைய விருதுநகர் மாவட்டம், அயன்சல்வார்பட்டு பகுதியை சேர்ந்த நமச்சிவாயம் மகன் கணேசமூர்த்தி, 28; திருத்தங்கல் கிராமத்தை சேர்ந்த ராஜேஷ்குமார் மகன் வைரமுத்து, 21; ஆகியோர், மதுரையில் உள்ள தனியார் விடுதியில் பதுங்கியிருந்தது தெரியவந்து, இருவரையும் கைது செய்தனர். விழுப்புரம் அழைத்து வரப்பட்ட அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள கடத்தல் கும்பபலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
மேலும்
-
பிரதமரை அவமதிக்கும் போதெல்லாம் காங்., துடைத்தெறியப்படும்; அமித் ஷா
-
பிரதமர் குறித்து ராகுலின் கருத்தால் காங்கிரஸ் பின்னடைவை சந்திக்கிறது; கிரண் ரிஜிஜூ
-
முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது; பசும்பொன்னில் மீண்டும் வலியுறுத்திய இபிஎஸ்
-
என்னை அவமரியாதை செய்துவிட்டனர்: பிரதமர் மோடி குற்றச்சாட்டு
-
முத்துராமலிங்க தேவர் பெயரில் ரூ.3 கோடியில் திருமண மண்டபம்; முதல்வர் அறிவிப்பு
-
வெளிநாட்டவருக்கு வேலை அனுமதி வழங்குவதை நிறுத்தியது அமெரிக்கா