மெல்போர்ன் டு -20 கிரிக்கெட்: ஆஸி., வெற்றி
 
 மெல்போர்ன் : இந்தியாவுக்கு எதிரான 2வது டி20 கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஒருநாள் கிரிக்கெட் தொடருக்குப் பிறகு, இரு அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் போட்டி மழையால் பாதியில் கைவிடப்பட்ட நிலையில், 2வது போட்டி மெல்போர்னில் இன்று நடந்தது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸி., அணி கேப்டன் மார்ஷ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி, களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. ஆஸி.,யின் அனுபவ பவுலர் ஹசில்வுட்டின் வேகத்தை இந்திய முன்கள வீரர்களால் தாக்குபிடிக்க முடியவில்லை. இதனால், 32 ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
கில் (5), சாம்சன் (2), சூர்யகுமார் யாதவ் (1), திலக் வர்மா (0) ஆகியோர் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர். அதிரடி ஆட்டக்காரர் அபிஷேக் ஷர்மா மட்டும் சிறப்பாக ஆடி 68 ரன் குவித்தார். ஹர்சித் ராணா 35 ரன் எடுத்தார்.  அக்சர் படேல் (7), ஷிவம் துபே (4), குல்தீப் யாதவ், வருண்  ஜஸ்ப்ரீத் பும்ரா ஆகியோர் ரன் எடுக்காமல் அவுட்டாக இந்திய அணி 18.4 ஓவரில் 125 ரன்களுக்கு அஐனத்து விக்கெட்களையும் இழந்தது.
இதனையடுத்து 126 ரன்கள் என்ற எளிய இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. துவக்க வீரர்களான கேப்டன் மிச்சல் மார்ஷ் (46),  டிராவிஸ் ஹெட் (28)ஆகியோர் அதிரடியாக ரன்களை குவித்தனர்.  இவர்களுக்கு பிறகு இங்லிஸ் (20) ரன்னிலும், டிம் டேவிட் ஒரு ரன்னிலும், மிச்சல் ஓவன் (14), மேத்யூ ஷார்ட்  ரன் எடுக்காமலும் அவுட்டானார்கள் அவுட்டானார்கள்.
ஆஸ்திரேலிய அணி 13.2 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 126 ரன் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மேலும்
-     
          48 பதக்கம் குவித்த இந்தியா * ஆசிய யூத் விளையாட்டில் முதன் முறையாக...
-     
          டில்லி அணி சாம்பியன்: புரோ கபடி லீக் தொடரில்
-     
          ஜிஎஸ்டி சீரமைப்பு: யுபிஐ பணப்பரிமாற்றம் அதிகரிப்பு
-     
          உலக விளையாட்டு செய்திகள்
-     
          ஜோனா, ஜானிஸ் கலக்கல்: சென்னை ஓபன் டென்னிசில்
-     
          தான்சானியாவில் தேர்தல் முடிவுக்கு எதிராக வெடித்தது மோதல்: 700 பேர் பலி என அச்சம்


 
  
  
 


