50 லட்சம் கொள்ளை வழக்கில் மேலும் நால்வர் கைது
தொண்டாமுத்துார்: கோவையில், குறைந்த விலைக்கு நகை தருவதாகக்கூறி, 50 லட்சம் ரூபாயை கொள்ளையடித்த வழக்கில், நால்வரை போலீசார் கைது செய்தனர்.
தேனி, கம்பத்தை சேர்ந்தவர் விஜய், 28. இவரும், இவரது உறவினருமான பாண்டீஸ்வரனும்,33 இணைந்து, பழைய தங்க நகைகளை குறைந்த விலைக்கு வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகின்றனர். இவ்விருவரும், கடந்த 2020ம் ஆண்டு, கஞ்சா விற்று வழக்கில் கைது செய்யப்பட்டு, கிளை சிறையில் இருந்த போது, மதுரையைச் சேர்ந்த தர்மா என்பவர் உடன் நட்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், விஜயும், தர்மாவும் கடந்த வாரம், இன்ஸ்டாகிராம் மூலம் பேசி உள்ளனர். அப்போது, தான் பழைய தங்க நகைகளை வாங்கி விற்பனை செய்வதாக விஜய் கூறியுள்ளார். இதனையடுத்து, தர்மா, கோவையில் ஒருவரிடம், 100 பவுன் தங்க நகை உள்ளதாகவும், அதை, 50 லட்சம் ரூபாய்க்கு நாம் பெற்று கொள்ளலாம் என தர்மா, விஜயிடம் கூறியுள்ளார். இதனை நம்பி, விஜயும், பாண்டீஸ்வரனும், கடந்த, 18ம் தேதி, கோவைக்கு வந்துள்ளனர். அப்போது, தர்மா, விஜயை, நகை வாங்க செல்வதாகக்கூறி, மதுக்கரை நோக்கி காரில், அழைத்து சென்றிருந்தார். அப்போது, தர்மாவின் கூட்டாளிகள், எதிர்திசையில், காரில் அதிவேகமாக மோதுவது போல வந்துள்ளனர். அப்போது, தர்மா, காரில் இருந்து ரூ.50 லட்சத்துட்ன இறங்கி, தனது கூட்டாளிகளுடன் காரில் ஏறி தப்பி சென்றுவிட்டார். இதுகுறித்து, விஜய் அளித்த புகாரின்பேரில், பேரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில், கும்பல் திட்டமிட்டு, கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியது தெரியவந்தது. இக்கும்பலை சேர்ந்த அழகு பாண்டி, கோபி, முருகன், அருண்குமார், முத்து தமிழ்மாறன், ரஞ்சித் ஆகிய ஆறு பேரை தனிப்படை போலீசார், கைது செய்து சிறையில் அடைத்தனர். அதன் தொடர்ச்சியாக, இக்கொள்ளை சம்பவத்தில், தொடர்புடைய தர்மராஜ்,32, வெங்கட்பிரபு, 25, பிச்சைமலை, 24, ஆகி யோரை, பெங்களூரில் பதுங்கியிருந்த போது, தனிப்படை போலீசார் கைது செய்து, நேற்று அழைத்து வந்து விசார ணை நடத்தினர். அதில், இவர்களுக்கு, வா கன வசதி மற்றும் கொள்ளை சம்பவத்தை அரங்கேற்ற இடத்தை தேர்வு செய்து கொடுத்த கோவை, நரசீபுரத்தை சேர்ந்த ஹரிபிரசாத்,34 என்பது தெரியவந்தது. இதனையடுத்து, ஹரிபிரசாத்தையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.
இவர்களிடமிருந்து, ஒரு கார், 4 பவுன் நகையை போலீசார் பறிமுதல் செய்தனர். இவ்வழக்கில் தொடர்புடைய, மேலும், 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
மேலும்
-
லாலு கட்சி வென்றால் காட்டாட்சி வரும்; அமித்ஷா ஆருடம்
-
ஐதராபாத் வந்த இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்; பயணிகள் பீதி
-
மனவேதனை அடைந்தேன்; ஆந்திர கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் இரங்கல்
-
வறுமையை அருகில் இருந்து பார்த்துள்ளேன்: பிரதமர் மோடி
-
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் திட்டம் இல்லை; ஜப்பான் பிரதமர்
-
நவ.,05 ல் அதிமுக மாசெக்கள் கூட்டம்