20 கிலோ கஞ்சா பறிமுதல்: மூவர் கைது

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, சொக்கனூர் ரோட்டில் பைக்கில் 20 கிலோ கஞ்சா கடத்திய மூவரை போலீசார் கைது செய்தனர்.

கோவை மாவட்டம், கிணத்துக்கடவு, சொக்கனூர் ரோடு மூலக்கடை பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கேரளாவில் இருந்து கிணத்துக்கடவு நோக்கி, இரு பைக்குகளில் வந்த பாலக்காடை சேர்ந்த, ஜான், 31, கோவையை சேர்ந்த நரேஷ், 35, மற்றும் ஆனந்த், 27, ஆகியோரிடம் விசாரித்தனர். வாகனத்தை சோதனை செய்ததில், 20 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருபந்தது தெரிந்தது.

விசாரணையில், கேரளாவில் இருந்து கோவைக்கு விற்பனைக்காக கஞ்சா கொண்டு செல்வது தெரியவந்தது. இதையடுத்து, மூவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 20 கிலோ கஞ்சா மற்றும் இரண்டு பைக்குகளை பறிமுதல் செய்தனர்.

Advertisement