சேதம் அடைந்த இடத்தில் வைக்கப்பட்ட பேரிகார்டு :தினமும் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
சிவகாசி: சிவகாசி வேலாயுத ரஸ்தா ரோடு பகுதியில் சேதம் அடைந்த இடத்தில் பேரிகார்டு வைத்துள்ளதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். சேதமடைந்த ரோட்டை சீரமைக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.
சிவகாசி சாட்சியாபுரம் மேம்பாலம் பணிகள் நடந்து வருவதை ஒட்டி வேலாயுத ரஸ்தா ரோடு முக்கிய மாற்றுப் பாதையாக உள்ளது. அனைத்து வாகனங்களும் இந்த ரோட்டில் தான் சென்று வருகின்றன.
இந்த ரோட்டை கடந்து தான் ரயில்வே ஸ்டேஷன், அரசு மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்.
இங்கு ஆங்காங்கே ரோடு சேதமடைந்துள்ளது. ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா அருகே ரோடு சேதம் அடைந்து மிகப்பெரிய பள்ளமாக மாறிவிட்டது. இதனை மறைப்பதற்காக தற்காலிகமாக பேரிகார்டு வைக்கப் பட்டுள்ளது.
இதனால் ரோடு குறுகிய நிலையில் டூ வீலர்கள் சென்று வருவதே சிரமமாக உள்ளது. கார் உள்ளிட்ட பெரிய வாகனங்கள் தட்டுத் தடுமாறியே செல்ல வேண்டியுள்ளது. தவிர இரவில் டூவீலர்களில் வருபவர்கள் அடிக்கடி விபத்திலும் சிக்குகின்றனர். எனவே இப்பகுதியில் சேதம் அடைந்த ரோட்டை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.
மேலும்
-
லாலு கட்சி வென்றால் காட்டாட்சி வரும்; அமித்ஷா ஆருடம்
-
ஐதராபாத் வந்த இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்; பயணிகள் பீதி
-
மனவேதனை அடைந்தேன்; ஆந்திர கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் இரங்கல்
-
வறுமையை அருகில் இருந்து பார்த்துள்ளேன்: பிரதமர் மோடி
-
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் திட்டம் இல்லை; ஜப்பான் பிரதமர்
-
நவ.,05 ல் அதிமுக மாசெக்கள் கூட்டம்