டில்லி அணி சாம்பியன்: புரோ கபடி லீக் தொடரில்
புதுடில்லி: புரோ கபடி லீக் தொடரில் டில்லி அணி சாம்பியன் ஆனது. விறுவிறுப்பான பைனலில் 31-28 என்ற கணக்கில் புனே அணியை வீழ்த்தியது.
இந்தியாவில், புரோ கபடி லீக் 12வது சீசன் நடந்தது. தமிழ் தலைவாஸ், மும்பை, பெங்களூரு உள்ளிட்ட 12 அணிகள் பங்கேற்றன. டில்லியில் நடந்த பைனலில் புனே, டில்லி அணிகள் மோதின. துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய டில்லி அணியினர், புனே அணியை ஒரு முறை 'ஆல்-அவுட்' செய்தனர். முதல் பாதி முடிவில் டில்லி அணி 20-14 என முன்னிலையில் இருந்தது.
இரண்டாவது பாதியில் ஓரளவு எழுச்சி கண்ட புனே அணிக்கு 14 புள்ளி மட்டும் கிடைத்தது. ஆட்டநேர முடிவில் டில்லி அணி 31-28 என்ற கணக்கில் வெற்றி பெற்று, 2வது முறையாக (2021-22, 2025) சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. அதிக முறை கோப்பை வென்ற அணிகளுக்கான பட்டியலில் 2வது இடத்தை (தலா 2 முறை) ஜெய்ப்பூர் அணியுடன் பகிர்ந்து கொண்டது டில்லி. முதலிடத்தில் பாட்னா அணி (3 முறை) உள்ளது.
டில்லி அணிக்கு நீரஜ் நார்வல் (9 புள்ளி), அஜின்கியா பவார் (6) கைகொடுத்தனர். புனே அணி சார்பில் ஆதித்யா ஷிண்டே 10 புள்ளி பெற்றார்.
ரூ. 3 கோடி பரிசு
புரோ கபடி சாம்பியன் டில்லி அணிக்கு கோப்பையுடன், ரூ. 3 கோடி பரிசாக வழங்கப்பட்டது. புனே அணிக்கு ரூ. 1.8 கோடி கிடைத்தது.
மேலும்
-
50 லட்சம் கொள்ளை வழக்கில் மேலும் நால்வர் கைது
-
20 கிலோ கஞ்சா பறிமுதல்: மூவர் கைது
-
பாரதிய வித்யா பவனில் நாட்டிய விழா துவக்கம்
-
பல திட்டங்கள் இருந்தும் பராமரிப்பின்றி குடிநீர் வீணாகுது! குழாய் உடைப்பு,மின்தடையால் தவிக்கும் மக்கள்
-
பனை விதை நடும் பணி
-
சேதம் அடைந்த இடத்தில் வைக்கப்பட்ட பேரிகார்டு :தினமும் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்