48 பதக்கம் குவித்த இந்தியா * ஆசிய யூத் விளையாட்டில் முதன் முறையாக...
மனாமா: பஹ்ரைனின் மனாமா நகரில், ஆசிய யூத் விளையாட்டு 3வது சீசன் நடந்தது. 40 நாடுகளின் 8000க்கும் மேற்பட்ட நட்சத்திரங்கள் பங்கேற்றனர். கடைசி நாளில் இந்திய அணி பதக்க மழை பொழிந்தது. கடைசி நாளில் குத்துச்சண்டையில் அசத்திய இந்தியாவுக்கு சந்திரிகா, ஆஹானா, குஷி சந்த் உள்ளிட்டோர் தங்கம் வசப்படுத்த, ஒரேநாளில் 22 பதக்கம் கைப்பற்றியது.
மொத்தம் 13 தங்கம், 18 வெள்ளி, 17 வெண்கலம், என 48 பதக்கம் வென்ற இந்தியா, பட்டியலில் 6வது இடம் பிடித்தது. தடகளத்தில் அதிகபட்சம் 9, குத்துச்சண்டை, மல்யுத்தத்தில் தலா 7 பதக்கம் கிடைத்தன.
இதற்கு முன் கடந்த 2013 யூத் ஆசிய விளையாட்டில் (சீனா) இந்தியா 14 பதக்கம் (3 தங்கம், 4 வெள்ளி, 3 வெண்கலம், 10 வது இடம்) வென்றதே அதிகபட்சமாக இருந்தது. 2009ல் இந்தியா 11 பதக்கம் (5+3+3, 7வது இடம்) வென்றது.
இம்முறை எப்போதும் இல்லாத வகையில் அதிகபட்சம் 48 பதக்கங்கள் குவித்து, பட்டியலில் 6வது இடம் பெற்று, தனது சிறப்பான செயல்பாட்டை பதிவு செய்தது.
147 பதக்கம் (63+49+35) வென்ற சீனா, முதலிடம் பிடித்தது.
மேலும்
-
50 லட்சம் கொள்ளை வழக்கில் மேலும் நால்வர் கைது
-
20 கிலோ கஞ்சா பறிமுதல்: மூவர் கைது
-
பாரதிய வித்யா பவனில் நாட்டிய விழா துவக்கம்
-
பல திட்டங்கள் இருந்தும் பராமரிப்பின்றி குடிநீர் வீணாகுது! குழாய் உடைப்பு,மின்தடையால் தவிக்கும் மக்கள்
-
பனை விதை நடும் பணி
-
சேதம் அடைந்த இடத்தில் வைக்கப்பட்ட பேரிகார்டு :தினமும் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்