அரைசதம் விளாசிய ஆயுஷ் * இந்திய 'ஏ' பேட்டர்கள் ஏமாற்றம்
பெங்களூரு: இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க 'ஏ' அணி, இந்திய 'ஏ' அணிக்கு எதிராக, இரண்டு அதிகாரப்பூர்வமற்ற டெஸ்டில் (தலா 4 நாள்) பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் பெங்களூருவில் நடக்கிறது. முதல் நாள் முடிவில் தென் ஆப்ரிக்க 'ஏ' அணி முதல் இன்னிங்சில் 299/9 ரன் எடுத்திருந்தது. ஷெப்கோ (4) அவுட்டாகாமல் இருந்தார்.
நேற்று இரண்டாவது நாள் ஆட்டம் நடந்தது. பிரார் பந்தில் செலே (6) அவுட்டாக, தென் ஆப்ரிக்க 'ஏ' அணி முதல் இன்னிங்சில் 309 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இந்தியா சார்பில் தனுஷ் 4, மானவ் 2, பிரார் 2 விக்கெட் சாய்த்தனர்.
ஆயுஷ் அரைசதம்
இந்திய 'ஏ' அணிக்கு சாய் சுதர்சன், ஆயுஷ் மாத்ரே (65) ஜோடி நல்ல துவக்கம் (90/1) தந்தது. பின் வந்த தேவ்தத் படிக்கல் (6), சாய் சுதர்சன் (32), ரஜத் படிதர் (19), கேப்டன் ரிஷாப் பன்ட் (17) என சீரான இடைவெளியில் அவுட்டாகி திரும்பினர். தனுஷ் (13) கைவிட, ஆயுஷ் படோனி 38 ரன் எடுத்து ஆறுதல் தந்தார்.
இந்திய 'ஏ' அணி முதல் இன்னிங்சில் 234 ரன்னில் ஆல் அவுட்டாகி, 75 ரன் பின்தங்கியது. தென் ஆப்ரிக்க 'ஏ' வீரர் சுப்ராயென் 5 விக்கெட் சாய்த்தார்.
தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சை துவக்கிய தென் ஆப்ரிக்க 'ஏ' அணி, இரண்டாவது நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 30 ரன் எடுத்து, 105 ரன் முன்னிலை பெற்றிருந்தது.
மேலும்
-
50 லட்சம் கொள்ளை வழக்கில் மேலும் நால்வர் கைது
-
20 கிலோ கஞ்சா பறிமுதல்: மூவர் கைது
-
பாரதிய வித்யா பவனில் நாட்டிய விழா துவக்கம்
-
பல திட்டங்கள் இருந்தும் பராமரிப்பின்றி குடிநீர் வீணாகுது! குழாய் உடைப்பு,மின்தடையால் தவிக்கும் மக்கள்
-
பனை விதை நடும் பணி
-
சேதம் அடைந்த இடத்தில் வைக்கப்பட்ட பேரிகார்டு :தினமும் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்