'அ.தி.மு.க.,வினர் என்னை திட்டுகின்றனர் அமித் ஷாவுக்காக அமைதி காக்கிறேன்'; அண்ணாமலை
கோவை: ''அ.தி.மு.க.,வில் உள்ள பல தலைவர்கள் என்னை திட்டிக்கொண்டு இருக்கின்றனர்; அமித் ஷாவிடம் கொடுத்த வார்த்தைக்காக அமைதியாக இருக்கிறேன்,'' என தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
கோவையில் அவர் அளித்த பேட்டி: நகராட்சி நிர்வாகத் துறையில் 888 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக, ஆதாரங்களுடன் 232 பக்க கடிதத்தை, தமிழக டி.ஜி.பி.,க்கு அமலாக்கத்துறை அனுப்பியுள்ளது. நேருவின் சகோதரர்கள் வீடுகளில் நடந்த ரெய்டுகளில் கிடைத்த ஆவணங்களின்படி, இந்த புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழக போலீசார் வழக்குப்பதிவு செய்ய மறுக்கின்றனர்.
துாய அரசியல்
இதுவே, வேறு அரசாக இருந்திருந்தால், ராஜினாமா செய்திருக்கும். முதல்வர் ஸ்டாலின் தலையிட்டு, எப்.ஐ.ஆர்., போட நடவடிக்கை எடுக்க வேண்டும். எப்.ஐ.ஆர்., போடாமல், அமலாக்கத் துறையால் நடவடிக்கை எடுக்க முடியாது. நெல் கொள்முதலுக்கான லாரி கான்ட்ராக்டில், 160 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது. இது பற்றி வாய் திறக்காத முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடி பற்றி தவறான விமர்சனம் செய்து வருகிறார்.
@quote@''எல்லாருக்கும் ஒரு எல்லை உண்டு; லட்சுமண ரேகை உண்டு. அதை கடக்கக்கூடாது என்று இருக்கிறேன்''quote
தமிழகத்தில் மோடியும், அமித் ஷாவும் துாய அரசியலை கொடுப்பர் என்ற எதிர்பார்ப்போடு அரசியலில் பயணிக்கிறேன். தமிழகத்தில் நல்ல அரசியல் கூட்டணி அமைய, இன்னும் காலம் இருக்கிறது. நான் ஒரு தொண்டனாக இருக்கிறேன்; பிடித்திருந்தால் இருக்கப் போகிறேன்; பிடிக்கவில்லை என்றால் கிளம்பப் போகிறேன். இன்னும் நான் காத்திருக்க தயார்.
எல்லை உண்டு
நான் முதல் தலைமுறை அரசியல்வாதி. என்னால் ஒரு கட்சி துவங்கி நடத்த முடியும் என நினைக்கிறீர்களா? மோடி மீது நான் வைத்துள்ள நம்பிக்கை, இம்மியளவும் குறையாது . சில சமயம், தலைவர்கள் சொல்வதால், மனசாட்சிக்கு எதிராக கூட பேசுகிறேன். பொறுத்திருந்து பார்ப்போம், நல்லது நடக்கும்.
இன்றைக்கும் நான் அ.தி.மு.க.,வை பற்றி பேசவில்லை. ஆனால், அக்கட்சியைச் சேர்ந்த எத்தனையோ தலைவர்கள், என்னை திட்டிக் கொண்டு தான் உள்ளனர்; அமித் ஷாவிடம் கொடுத்த வார்த்தைக்காக அமைதியாக உள்ளேன். காலம் வரும்போது பேசுகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அட நீங்க வேற இப்போவெல்லாம் அவரு பத்து ரூவா பாலாஜி பத்தியும் பேசறது இல்லே
Career is a corporate word. With out aiadmk and EPS none can defeat dmk alliance. Amit shah sir is very intelligent politician and he will strengthen aiadmk alliance with new parties which is highly confidential at this juncture.
அதிமுக ஒன்றும் யோக்கியமான கட்சி அல்லவே? திமுக உலகமகா திருடான்னா அதிமுக மகா திருடன். அவ்வளவுதான் வித்தியாசம். மற்றபடி இரண்டும் ஒரேகுட்டையில் ஊறிய மட்டைகளே. உடனே நான் சங்கி, பிஜேபி ன்னு கெளப்பிகிட்டு வருவனுங்க உபிஸ்.
சரி அண்ணமலை முன்பு எல்லாம் மணல் கொள்ளை எல்லாம் பற்றி ரொம்ப வீரியம் வீரமா பேசுவ இப்போ பேச்சே காணோமே , மணல் கொள்ளை நின்று விட்டதா இல்லை , .....ல் வந்து கொண்டு இருக்கா என்ன வோ இப்படி தான் ஊழல் நீ ஒலிக்கிற
நேர்மை ஆன ஆட்கள் நேர்மையாக அரசியலில் ஈடுபடமுடியாது என்பதற்கு அண்ணாமலை ஒரு உதாரணம்
பலி கிடா ஆக்கப்பட்டவர், பாவம்
இவரு பெரிய அப்பாடக்கர், அப்படியே முனா மடக்கி, ஒடித்து விடுவார், அமித் சொன்னதால் சொம்பு சும்மா இருக்கிறது?? அதிமுக கொஞ்சம் கவனமா இருக்கனும்.இல்லனா என்ன நடக்கும் என என்கெய் தெரியாது?? ஆட்டுக்குட்டி முட்டு அப்படி இருக்கும்????? வராது
என்று நீர் அண்ணன் எடபடியாய் உயிர் கொடுத்தாவது முதல்வர் ஆக்குவோம் என்று சொல்லி நமட்டு சிரிப்பு சிரித்தாயே , உன்னை பதவி விட்டு இறக்கிய எடப்பாடியை ஒழிக்காமல் விட மாட்டேன் என்று விட்ட சபதம் எல்லாம் தெரியும்
கடக்கக்கூடாது என்று தெரியுது இல்ல அப்படியே இரு
இது ஒரு கருத்தா ? நீ படித்தவனா? அரைகுறைபோல கருத்துபோடாதே? அவரு சொல்றதை மூளை இருந்தா யோசிச்சு பாரு.. 200 ரூவா உ பி தானே நீ? மறுக்காமே சொல்லு
அன்று காமராஜர் தன்செல்வாக்கால் அதிக நிதியை பெற்று அடிப்படையை அமைத்துக் கொடூத்தார்,பின்பு அண்ணாவில் ஆரம்பித்து மெல்ல இருள் சூழ்ந்தது அண்ணாமலையால் வெளிச்சம் பரவும் என்று நம்பியவர்களில் நானும் ஒருவன் . யார் செய்த சதியோ(மகனின் கிரிக்கெட் நட்பு வழியில் கப்பம் கட்டுபவர்களாலோ இல்லை ஜாதி வெறியர்களாலோ) எல்லாம் பாழாகி விட்டது .இன்னும் அண்ணாமலை மீது நம்பிக்கை உள்ளது .அவர் பொறுமையாக சரியான திசையில் பயணிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் (அடிக்கடி விட்டு செல்வேன் என்ற வார்த்தைகள் உயயோகிக்கவேண்டாம்).
ஒரு படத்தில் விவேக் கண்ட் ரோலில் ஒரு ஜுராசிக் பார்க் இருக்கும். விவேக் ஓக்கேன்னா எதிரிங்களை கடிச்சி குதறும்.