நவ.,05 ல் அதிமுக மாசெக்கள் கூட்டம்

1

சென்னை: வரும் 5ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது.


ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நடந்த தேவர் குருபூஜையில் ஓபிஎஸ், தினகரன், சசிகலா ஆகியோரை செங்கோட்டையன் சந்தித்தார். ஓபிஎஸ், தினகரனுடன் இணைந்து தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். இதனையடுத்து செங்கோட்டையனை அதிமுகவில் இருந்து இபிஎஸ் நீக்கினார்.


இது தனக்கு வேதனை அளிக்கிறது. இபிஎஸ் சர்வாதிகாரியாக செயல்படுவதாக செங்கோட்டையன் குற்றம்சாட்டினார். பதிலுக்கு இபிஎஸ், ' செங்கோட்டையனின் வன்மம் வெளிப்பட்டது' என்றார்.


இதனால், அதிமுகவில் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 05ம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இபிஎஸ் தலைமையில் இக்கூட்டம் நடைபெற உள்ளது.

Advertisement