ஜூடோ: ஸ்ரத்தா 'தங்கம்'

கோல்டு கோஸ்ட்: ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் சீனியர் ஓசியானியா ஜூடோ சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. பெண்களுக்கான 52 கிலோ பிரிவில் இந்தியா சார்பில் ஸ்ரத்தா சோபாடே பங்கேற்றார். 'ஏ' பிரிவில் இடம் பெற்ற இவர் முதலிடம் பிடித்து, அரையிறுதிக்கு முன்னேறினார்.

இதில் அமெரிக்காவின் மாலியாவை வீழ்த்தினார். அடுத்து நடந்த பைனலில் ஸ்ரத்தா, சீனாவின் ஷுக் கி டிசுய்யை எதிர்கொண்டார். இதில் சிறப்பாக செயல்பட்ட ஸ்ரத்தா, வெற்றி பெற்று, தங்கப்பதக்கம் கைப்பற்றினார்.

ஆஸ்திரேலியாவின் மாலியே, நியூசிலாந்தின் ரியா வெண்கலப் பதக்கம் வென்றனர்.

Advertisement