பெலகாவியை விட்டுக் கொடுக்க முடியாது: சித்தராமையா
பெங்களூரு : பெலகாவி மாவட்டம் கர்நாடகாவின் ஒருங்கிணைந்த பகுதி. அதனை மஹாராஷ்டிராவிடம் சேர்ப்பதை அனுமதிக்க முடியாது என கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார்.
மஹாராஷ்டிரா எல்லையில் அமைந்துள்ள பெலகாவி பகுதி, கர்நாடகாவின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. இதனை மஹாராஷ்டிரா மாநிலம் உரிமை கோருவதால் நீண்ட காலமாக இரு மாநிலங்களுக்கு இடையே பிரச்னை இருந்து வருகிறது. பெலகாவியில் தங்களுக்கு உள்ள உரிமையை நிரூபிக்க அங்கு சட்டசபை கூட்டத்தொடரை கர்நாடக அரசு நடத்தி வருகிறது.
இந்நிலையில் முதல்வர் சித்தராமையா கூறியதாவது: பெலகாவி விஷயத்தில் சமரசம் செய்ய முடியாது. மஹாராஷ்டிரா அரசு சுப்ரீம் கோர்ட்டை அணுகியுள்ளது. இந்த பகுதியை கைவிட்டு விட முடியாது. பெலகாவி கர்நாடகாவின் ஒருங்கிணைந்த பகுதி. இதனை யாரும் மாற்ற முடியாது.
கன்னட மொழி, கலாசாரம், நிலத்தை பாதுகாக்க மக்கள் உறுதியேற்க வேண்டும். கர்நாடகாவில் வாழ்க்கையை அமைத்து கொண்டவர்கள் கன்னட சூழ்நிலையை மதிக்க வேண்டும். கன்னட மண்ணில் கன்னட மொழியில் மட்டும் பேசுவோம் என உறுதி ஏற்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
வாய்க்காலில் ஆகாயத்தாமரை அகற்ற நடவடிக்கை தேவை
-
நவீன ஆயத்த ஆடையகம் அமைக்க ரூ.3 லட்சம் நிதி உதவி: கலெக்டர்
-
தட்டை பயறு அறுவடை துவக்கம் விரைவில் சந்தைகளில் விற்பனை
-
பராமரிப்பு இல்லாத ராஜாங்குளம் துார்வாரி சீரமைக்க கோரிக்கை
-
விதிமு றையை மீறி மெய்யூர் ஏரியிலிருந்து... மணல் கொள்ளை:நீரை வெ ளியேற்றுவதால் விவசாயிகள் அதிர்ச்சி
-
உயர்மட்ட பாலத்தில் எரியாத விளக்குகளால் ஓட்டுனர்கள் அவதி