காட்டு மாடு மோதி பயணிகள் காயம்
  மூணாறு:  கர்நாடக மாநிலம், கோலார் பகுதியைச் சேர்ந்தவர்கள் நிதின் 21, சுகாஷ் 23. இவர்கள் டூவீலரில் மூணாறுக்கு சுற்றுலா வந்தனர். நேற்று  மாட்டுபட்டி அணைக்கு சென்று விட்டு மதியம் மூணாறை நோக்கி வந்து கொண்டிருந்தனர். 
 மாட்டுபட்டியில் தனியார்  பள்ளி அருகே வந்தபோது ரோட்டோரம் மண் திட்டின் மீது  நின்று கொண்டிருந்த காட்டு மாடு திடிரென ரோட்டின் குறுக்கே பாய்ந்தது. அப்போது டூவீலர் மீது காட்டுமாடு  மோதியதால் இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தனர். அந்த வழியில் வந்தவர்கள் இருவரையும் மீட்டு மூணாறில் மருத்துவமனையில் அனுமதித்தனர். 
 வாசகர் கருத்து 
         
       
      
 முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!          
   
 
    
      மேலும்
-     
        
 தமிழக முதல்வர் துயில் களைவது எப்போது? விஜய் கேள்வி
 -     
        
 பீஹார் தேர்தல்: ரூ.108 கோடி மதிப்பு பணம், பொருட்கள் பறிமுதல்
 -     
        
 'நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி' முன்னெடுப்பில் ரூ.1000கோடி மதிப்பில் உதவிகள்; முதல்வர் பெருமிதம்
 -     
        
 திருமணத்தில் விருந்தினர்கள் மோதல்:உ.பி.யில் 15 பேர் படுகாயம்
 -     
        
 சான்பிரான்சிஸ்கோ-டில்லி ஏர் இந்தியா விமானத்தில் திடீர் கோளாறு: மங்கோலியாவில் அவசர தரையிறக்கம்
 -     
        
 அ.தி.மு.க.,விலும் குடும்ப அரசியல்: செங்கோட்டையன் புகார்
 
Advertisement
 Advertisement