தறிகெட்டு ஓடிய ஆம்புலன்ஸ் மோதியதில் தம்பதி பலி: சிக்னலில் டூ வீலரில் காத்திருந்த போது சோகம்
பெங்களூரு; பெங்களூருவில், அதிவேகத்தில் பறந்த ஆம்புலன்ஸ் வாகனம் டூ வீலர் மீது மோதியதில் தம்பதி உயிரிழந்தனர்.
இதுபற்றிய விவரம் வருமாறு;
நேற்றிரவு 11 மணி அளவில், சாந்திநகர் பஸ் நிலையம் அருகில் ரிச்மாண்ட் சர்க்கிள் பகுதியில் உள்ள சிக்னல் ஒன்றில் சிவப்பு விளக்கு ஒளிர்ந்ததால் அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் நின்றனர். அப்போது அசுர வேகத்தில் பின்னால் வந்து கொண்டிருந்த ஆம்புலன்ஸ் சிக்னலுக்காக காத்திருந்த டூ வீலர் ஒன்றின் மீது முதலில் மோதியது.
மோதிய வேகத்தில் அங்கே இருந்த வேறு சில டூ வீலர்களையும் இழுத்த படியே சிறிதுதூரம் சென்றது. பின்னர், அங்குள்ள சிக்னல் கம்பத்தின் மீது மோதி நின்றது. இந்த விபத்தில் டூ வீலரில் இருந்த தம்பதி பலியாகினர்.
போலீஸ் விசாரணையில் உயிரிழந்தவர்கள் இஸ்மாயில்(40) மற்றும் அவரது மனைவி சமீன் பானு(33) என்பது தெரியவந்தது. இந்த விபத்தில் 2 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்தை ஏற்படுத்திய ஆம்புலன்ஸ் டிரைவர் அசோக்குமார் என்பவர், சம்பவம் நடந்த தருணத்தில் அங்கிருந்து தப்பிச் சென்றார். சிறிதுநேர தேடுதல் வேட்டைக்கு பின்னர் போலீசார் அவரை கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும்
-
கிறிஸ்துவர்கள் கொல்லப்படுவதை தடுக்காத நைஜீரியா மீது தாக்குதல் நடத்த டிரம்ப் உத்தரவு
-
அதிகரிக்கும் கொசுத்தொல்லை உறக்கத்தை தொலைக்கும் மக்கள்
-
ஆர்.எஸ்.எஸ்., வரலாற்று குறிப்பு வழங்கல்
-
வடலுார் புதிய பஸ் நிலையம் பயன்பாட்டிற்கு வருவது... எப்போது?; கடைகளுக்கு அடிப்படை வசதிகள் செய்வதில் தாமதம்
-
அறச்சந்திப்பு கூட்டம்
-
கல்லறை திருநாள் அனுசரிப்பு