கிறிஸ்துவர்கள் கொல்லப்படுவதை தடுக்காத நைஜீரியா மீது தாக்குதல் நடத்த டிரம்ப் உத்தரவு

9

வாஷிங்டன்: மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில், கிறிஸ்துவர்கள் கொல்லப்படுவதை அந்நாட்டு அரசு ஆதரிப்பதாக கூறியுள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், நைஜீரியா மீது தாக்குதல் நடத்தும் திட்டத்தை தயார்படுத்தும்படி ராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.

உயிரிழப்பு மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில், முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்துவர்கள் சம எண்ணிக்கையில் வசிக்கின்றனர்.

இங்கு போகோ ஹராம், ஐ.எஸ்., அல் - குவைதா போன்ற பயங்கரவாத அமைப்புகள், பண்டிட்ஸ் உள்ளிட்ட ஆயுதமேந்திய கும்பல்கள் செயல்படுகின்றன.

இவர்கள் நைஜீரியாவின் பல்வேறு கிராமங்களுக்குள் நுழைந்து அவ்வப்போது தாக்குதல் நடத்துகின்றனர்.

கடந்த ஆண்டு மட்டும் இத்தகைய பயங்கரவாத குழுக்களின் தாக்குதலால் ராணுவத்தினர், பொதுமக்கள் என 2,400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இந்த ஆண்டு ஜூலை வரையிலான ஏழு மாதங்களிலேயே பயங்கரவாத தாக்குதலால் 2,000க்கும் மேற்பட்டோர் இறந்து உள்ளனர்.

இந்நிலையில், 'நைஜீரிய அரசு கிறிஸ்துவர்களின் படுகொலைகளை தடுக்கத் தேவையான நடவடிக்கை எடுக்கவில் லை' என, அமெரிக் க அதிபர் டிரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

நைஜீரிய அரசு கிறிஸ்துவர்கள் கொல்லப் படுவதை தொடர்ந்து அனுமதித்தால், நைஜீரியாவுக்கான அனைத்து உதவியையும் அமெரிக்கா உடனே நிறுத்தும்.

அந்நாட்டில் இந்த படுகொலைகளை நிகழ்த்தி கொண்டிருக்கும் முஸ்லிம் பயங்கரவாதிகளை முற்றிலும் அழிக்கும் வாய்ப்பும் எங்களுக்கு உள்ளது. இது தொடர்பான நடவடிக்கைக்கு தயாராக திட்டங்கள் தயார் செய்யும்படி போர் துறைக்கு உத்தரவிட்டுள்ளேன்.

எச்சரிக்கை நாங்கள் தாக்குதல் நடத்தினால் அது அதிரடியாகவும், கொடியதாகவும் இருக்கும். எனவே நைஜீரிய அரசு விரைவாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என எச்சரிக்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதற்கு பதிலளித்த நைஜீரியா அதிபர் போலா அகமது டினுபு, “நை ஜீரிய அரசு நாட்டில் உள்ள அனைத்து மதத்தினரையும் பாதுகாப்பதில் அமெரிக்காவுடனும், சர்வதேச நாடுகளுடனும் இணைந்து செயல்படும்,” என்றார்.

Advertisement