கல்லறை திருநாள் அனுசரிப்பு 

கடலுார்: கடலுாரில் கல்லறை திருநாளையொட்டி கிறிஸ்தவர்கள், முன்னோர்களின் கல்லறைகளில் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

இறந்த முன்னோர்களை நினைவு கூறும் வகையில், கிறிஸ்தவர்கள், ஆண்டுதோறும் கல்லறை திருநாள் அனுசரித்து வருகின்றனர்.

அந்த வகையில், கல்லறை திருநாள் நேற்று அனுசரிக்கப்பட்டது.

இதனையொட்டி கடலுார் அரசு தலைமை மருத்துவமனை அருகில் உள்ள கல்லறை தோட்டத்தில், ஏராளமான கிறிஸ்தவர்கள், காலை முதல் திரண்டு வந்து, இறந்த முன்னோர்களின் கல்லறைகளை சுத்தம் செய்து, மாலை மற்றும் பூக்களால் அலங்கரித்தனர். பின், மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தி விட்டு கூட்டு திருப்பலியில் பங்கேற்றனர்.

Advertisement