மத்திய அரசின் முயற்சிக்கு வெற்றி: கணிசமாக குறைந்தது நக்சல் பாதிப்பு மாவட்டங்கள்

4


புதுடில்லி: மத்திய அரசு எடுத்த நடவடிக்கை காரணமாக, நாட்டில் நக்சல் வன்முறையால் பாதித்த மாவட்டங்களின் எண்ணிக்கை 46 ல் இருந்து 38 ஆகவும், நக்சல்களால் கவலைக்குரிய மாவட்டங்களின் எண்ணிக்கை 4 ஆகவும் , அதிக பாதிப்புள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை 3 ஆகவும் குறைந்துள்ளது.

நாட்டில் நக்சல் பாதிப்பை 2026ம் ஆண்டுக்குள் ஒழிக்க வேண்டும் என மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது. அந்த அமைப்பினருக்கு எதிராக அதிரடிப்படையினர், மாநில போலீசார், மத்திய படையினர் கடுமையான நடவடிக்கையை எடுக்கின்றனர். பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் நக்சல் அமைப்பின் முக்கிய தலைவர்கள், நிர்வாகிகள் கொல்லப்பட்டனர். பல இடங்களில் அந்த அமைப்பினர் சரணடைந்து வருகின்றனர். இதனையடுத்து பேச்சுவார்த்தைக்கு தயார் என அந்த அமைப்பினர் அறிவித்ததை மத்திய அரசு ஏற்க மறுத்து விட்டது. ஆயுதங்களை கீழே போட்டு விட்டு சரணடைய வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.


இந்நிலையில், 2015 ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இடதுசாரி பிரிவினைவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை மற்றும் தேசிய கொள்கை அறிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.


மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: நக்சல் அமைப்பினருக்கு எதிரான நடவடிக்கைகளில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால், நக்சல் வன்முறையால் பாதிப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பான செலவு அதிகம் உள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை 46ல் இருந்து 38 ஆக குறைந்துள்ளது. (பாதுகாப்பு தொடர்பான செலவு என்பது நக்சல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் மாநிலங்களுக்கு மத்திய அரசு நிதியுதவி வழங்கும் திட்டமாகும்.)


மத்திய அரசின் நடவடிக்கை காரணமாக நக்சல் பாதிப்பு மாவட்டங்களின் எண்ணிக்கை 18 ல் இருந்து 11 க குறைந்துள்ளது. மிகவும் பாதிப்புக்குள்ளான மாவட்டங்களின் எண்ணிக்கை 6 ல் இருந்து 3 ஆக குறைந்துள்ளது. இந்த பிரிவில் சத்தீஸ்கரின் நாராயண்பூர், பிஜாப்பூர் மற்றும் சுக்மா ஆகிய மாவட்டங்கள் மட்டுமே உள்ளன.


கவலைக்குரிய மாவட்டங்கள் என்ற பிரிவில் சத்தீஸ்கரின் கன்கர், ஜார்க்கண்டின் மேற்கு சிங்பூம் மற்றும் ம.பி.,யின் பாலாகாட் மற்றும் மஹாராஷ்டிராவின் கட்சிரோலி ஆகிய மாவட்டங்கள் உள்ளன.(இந்த பிரிவில் உள்ள மாவட்டங்களில், நக்சல் ஆதரவாளர்களுக்கு எச்சரிக்கை கெடுக்கப்படுவதடன், வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்)


நக்சல் பாதிப்பில் மற்ற வகை என்ற பிரவில் சத்தீஸ்கரின் தாண்டேவாடா, கரியாபாந்த், மோஹ்லா -மன்பூர்- அம்பார்க் சவுகி மற்றும் ஒடிசாவின் கந்தமால் ஆகியவை உள்ளன. ( இங்கு போதுமான அளவு பாதுகாப்புப் படையினர் நிறுத்தப்படுவதுடன், வளர்ச்சி திட்டங்கள் கவனம் செலுத்த வேண்டும் )

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement