துவம்சம் செய்த வாஷிங்டன் சுந்தர்; ஆஸி.,யைத் தோற்கடித்தது இந்தியா
ஹோபர்ட்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி மழையால் ரத்தானது. இரண்டாவது போட்டியில் இந்தியா தோற்றது.
இந்த சூழலில், முக்கியமான மூன்றாவது போட்டி இன்று (நவ.,02) ஹோபர்ட், பெல்லிரைவ் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலியா அணிக்கு ஹெட் (6), இங்லீஷ் (1), மார்ஷ் (11), ஓவன் (0) ஆகியோரின் விக்கெட்டுகளை கைப்பற்றி, இந்திய அணி சிறப்பான தொடக்கத்தை அமைத்து கொடுத்தது. ஆனால், மறுமுனையில் தனியொரு ஆளாக நிலைத்து நின்று விளையாடிய டிம் டேவிட் அதிரடியாக ஆடி ரன் குவித்தார். 38 பந்துகளில் 74 ரன் குவித்து அணியை சரிவில் இருந்து மீட்டார்.
அதன்பிறகு, பேட்டிங் வந்த ஸ்டொய்னிஸ் மற்றும் ஷார்ட் அதிரடியாக விளையாடி ரன் குவித்தனர். ஸ்டொய்னிஸ் 39 பந்துகளில் 64 ரன் குவித்தார். இறுதியில் ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 186 ரன் சேர்த்தது.
இந்திய அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டும், வருண் சக்ரவர்த்தி 2 விக்கெட்டும், துபே ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
தொடர்ந்து, பேட் செய்த இந்திய அணிக்கு துவக்கம் சுமாராக அமைந்தாலும், அபிஷேக் ஷர்மா (25), சூர்யகுமார் யாதவ் (24), திலக் வர்மா (29) ஆகியோர் தங்களின் பங்களிப்பை கொடுத்தனர். இறுதியில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தரும் அதிரடியாக விளையாடினார். 23 பந்துகளில் 49 ரன் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால், இந்திய அணி 19.3 பந்தில் இலக்கை அடைந்து, 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.
இதன்மூலம், 5 போட்டிகள் கொண்ட டி 20 கிரிக்கெட் தொடரில், 3 போட்டிகள் நிறைவடைந்த நிலையில், 1-1 என்ற கணக்கில் தொடர் சமநிலையில் உள்ளது.
இவரை ஒரு ஓவர் கூட bowl செய்ய விடவில்லை. ஒரு batsman கூட அபிஷேக் சர்மா 13 run கொடுத்து ஒரு over போடும்போது ஒரு சிறந்த பந்து வீச்சாளர் என்ற பெயருள்ள இவருக்கு எதனால் ஒரு ஓவர் கூட கொடுக்கவில்லை ?
இவ்வளவு நன்றாக விளையாடியும் அவர் ட்ரோப் செய்யப்படுவார். இதுதான் கம்பிர் கோச்சிங் லக்ஷணம்மேலும்
-
கிறிஸ்துவர்கள் கொல்லப்படுவதை தடுக்காத நைஜீரியா மீது தாக்குதல் நடத்த டிரம்ப் உத்தரவு
-
அதிகரிக்கும் கொசுத்தொல்லை உறக்கத்தை தொலைக்கும் மக்கள்
-
ஆர்.எஸ்.எஸ்., வரலாற்று குறிப்பு வழங்கல்
-
வடலுார் புதிய பஸ் நிலையம் பயன்பாட்டிற்கு வருவது... எப்போது?; கடைகளுக்கு அடிப்படை வசதிகள் செய்வதில் தாமதம்
-
அறச்சந்திப்பு கூட்டம்
-
கல்லறை திருநாள் அனுசரிப்பு