ரஞ்சி: தமிழக பவுலர்கள் தடுமாற்றம்
கோவை: ரஞ்சி கோப்பை லீக் போட்டியில் தமிழக பவுலர்கள் தடுமாறினர்.
கோவை, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லுாரி மைதானத்தில் நடக்கும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் 'ஏ' பிரிவு லீக் போட்டியில் தமிழகம், 'நடப்பு சாம்பியன்' விதர்பா அணிகள் விளையாடுகின்றன. முதல் நாள் முடிவில் தமிழக அணி முதல் இன்னிங்சில் 252/4 ரன் எடுத்திருந்தது. இந்திரஜித் (94) அவுட்டாகாமல் இருந்தார்.
இரண்டாம் நாள் ஆட்டத்தில் பாபா இந்திரஜித் 96 ரன்னில் ஆட்டமிழந்தார். ஷாருக்கான் (17), முகமது அலி (14), கேப்டன் சாய் கிஷோர் (1) சோபிக்கவில்லை. தமிழக அணி முதல் இன்னிங்சில் 291 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது.
பின் முதல் இன்னிங்சை துவக்கிய விதர்பா அணிக்கு சத்யம் போயர் (11) ஏமாற்றினார். பின் இணைந்த அமன் மொகாதே, துருவ் ஷோரே ஜோடி நம்பிக்கை தந்தது. இருவரும் அரைசதம் கடந்தனர். இவர்களை பிரிக்க முடியாமல் தமிழக பவுலர்கள் தடுமாறினர். இரண்டாவது விக்கெட்டுக்கு 123 ரன் சேர்த்த போது சாய் கிஷோர் பந்தில் அமன் (80) அவுட்டானார்.
ஆட்டநேர முடிவில் விதர்பா அணி முதல் இன்னிங்சில் 211/2 ரன் எடுத்திருந்தது. ஷோரே (80), ரவிகுமார் சமர்த் (24) அவுட்டாகாமல் இருந்தனர். தமிழகம் சார்பில் சாய் கிஷோர் 2 விக்கெட் கைப்பற்றினார்.
மேலும்
-
கோவையில் கல்லுாரி மாணவிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை: 3 பேரை தேடும் போலீஸ்
-
இளம் வயதில் கோடீஸ்வரர்கள்; மார்க் ஜூக்கர்பெர்க்கை பின்னுக்குத் தள்ளிய இந்திய வம்சாவளி நண்பர்கள்
-
அனில் அம்பானியின் ரூ.3 ஆயிரம் கோடி சொத்து முடக்கம்
-
வார தொடக்க முதல்நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 அதிகரிப்பு
-
தெலுங்கானாவில் அரசு பஸ்- லாரி மோதி விபத்து; 19 பேர் பரிதாப பலி
-
'முதல் பக்கம் முதல் கடைசி பக்கம் வரை படிக்க பிடிக்கும்'