உலக செஸ்: திவ்யா தோல்வி
கோவா: செஸ் உலக கோப்பை முதல் சுற்றில் இந்தியாவின் திவ்யா தோல்வியடைந்தார்.
கோவாவில், செஸ் உலக கோப்பை 11வது சீசன் நடக்கிறது. இந்தியாவின் குகேஷ், பிரக்ஞானந்தா, அர்ஜுன், திவ்யா உள்ளிட்ட 206 பேர் பங்கேற்கின்றனர்.
முதல் சுற்றில் இந்தியாவின் பிரனேஷ், கஜகஸ்தானின் சட்பெக் அக்மெடினோவா மோதினர். இதன் முதல் போட்டியில் வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய பிரனேஷ் வெற்றி பெற்றார். இரண்டாவது போட்டியில் கருப்பு நிற காய்களுடன் விளையாடிய பிரனேஷ், 44வது நகர்த்தலில் 'டிரா' செய்தார். முடிவில் பிரனேஷ் 1.5-0.5 என்ற கணக்கில் வெற்றி பெற்று 2வது சுற்றுக்கு முன்னேறினார்.
இந்தியாவின் திவ்யா தேஷ்முக் 0-2 என கிரீஸ் வீரர் ஸ்டமாடிஸ் கோர்குலோஸ்-ஆர்டிடிசிடம் தோல்வியடைந்தார்.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் சூர்ய சேகர் கங்குலி, அஜர்பெய்ஜானின் அகமது அகமத்ஜடா மோதினர். இரண்டு போட்டியிலும் வென்ற சூர்ய சேகர் 2.0-0.0 என 2வது சுற்றுக்குள் நுழைந்தார். இந்தியாவின் கார்த்திக் வெங்கடராமன் 1.5-0.5 என கொலம்பியாவின் ராபர்டோ கார்சியாவை வென்றார். இந்தியாவின் பிரனவ் 2.0-0.0 என அல்ஜீரியாவின் ஆலா எட்டினை வீழ்த்தினார்.
இந்தியாவின் ரித்விக் ராஜா, கஜகஸ்தானின் காசிபெக் நோகர்பெக் மோதிய முதல் சுற்றின் 2 போட்டிகளும் 'டிரா' ஆகின. இதனையடுத்து போட்டி 1-1 என சமநிலையில் உள்ளது. இனி, 'டை பிரேக்கர்' முறையில் வெற்றியாளர் முடிவாகும்.
மேலும்
-
கோவையில் கல்லுாரி மாணவிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை: 3 பேரை தேடும் போலீஸ்
-
இளம் வயதில் கோடீஸ்வரர்கள்; மார்க் ஜூக்கர்பெர்க்கை பின்னுக்குத் தள்ளிய இந்திய வம்சாவளி நண்பர்கள்
-
அனில் அம்பானியின் ரூ.3 ஆயிரம் கோடி சொத்து முடக்கம்
-
வார தொடக்க முதல்நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 அதிகரிப்பு
-
தெலுங்கானாவில் அரசு பஸ்- லாரி மோதி விபத்து; 19 பேர் பரிதாப பலி
-
'முதல் பக்கம் முதல் கடைசி பக்கம் வரை படிக்க பிடிக்கும்'