சென்னை ஓபன்: ஜானிஸ் சாம்பியன்

சென்னை: சென்னை ஓபன் டென்னிஸ் ஒற்றையரில் இந்தோனேஷியாவின் ஜானிஸ் டிஜென் கோப்பை வென்றார்.

சென்னையில், பெண்களுக்கான 'டபிள்யு.டி.ஏ., 250' அந்தஸ்து பெற்ற சென்னை ஓபன் டென்னிஸ் தொடர் நடந்தது. ஒற்றையர் பிரிவு பைனலில் இந்தோனேஷியாவின் ஜானிஸ் டிஜென், ஆஸ்திரேலியாவின் கிம்பர்லி பிர்ரெல் மோதினர். முதல் செட்டை 6-4 எனக் கைப்பற்றிய ஜானிஸ் டிஜென், 2வது செட்டை 6-3 என தன்வசப்படுத்தினார்.
இரண்டு மணி நேரம் நீடித்த பைனலில் அசத்திய ஜானிஸ் டிஜென் 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, டபிள்யு.டி.ஏ., டூர் ஒற்றையரில் தனது முதல் பட்டத்தை கைப்பற்றினார்.

Advertisement