தென்னையை பார்வையிட தொழில்நுட்பக் குழு மத்திய அரசின் முடிவுக்கு வரவேற்பு
மதுரை: 'தென்னை மரங்களை தாக்கும் நோயை ஆய்வு செய்வதற்கு மத்திய அரசு தொழில்நுட்பக் குழுவை அமைத்ததை வரவேற்கிறோம்.
அதேநேரத்தில் இழப்பீடும் வழங்க வேண்டும்' என தேசிய தென்னை விவசாயிகள் அணியினர் தெரிவித்தனர்.
தமிழகத்தில் இரண்டாண்டுகளாக தென்னைமரங்களில் வெள்ளை ஈ, வேர்வாடல் நோய் தாக்குதல் அதிகரித்துள்ளது. 25 ஆண்டுகளுக்கு மேலாக பலன்தந்த ஆயிரக்கணக்கான தென்னை மரங்கள் நோயால் வெட்டப்பட்டதால் திருப்பூர், கோவையில் விவசாயிகள் பொருளாதார ரீதியாக பாதிப்புக்குள்ளாகினர்.
மரங்களின் காய்ப்புத்தன்மை குறைவால் உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது.
காற்று, மண் மூலம் பரவும் இந்நோய் கேரளா, கன்னியாகுமரி, திருப்பூர், கோவை, மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதி வரை பரவியுள்ளது.
தற்போது பழநி, மதுரையில் தாக்குதல் தொடங்கியுள்ளது என்கிறார் தேசிய தென்னை விவசாயிகள் அணியின் துணை ஒருங்கிணைப்பாளர் பார்த்தசாரதி.
அவர் கூறியதாவது: மழை பெய்தால் இந்நோய் குறையும், வெயிலில் மறுபடியும் அதிகரிக்கும். தென்னை மரங்கள் இருக்கும், காய்கள் வராது. தீவிர நோய் தாக்கத்தால் பலன்தரும் ஒட்டுரக தென்னை மரங்களை விவசாயிகள் இழந்துள்ளனர்.
தேங்காய் விலையேற்றத்திற்கு இப்பிரச்னையே முதல் காரணம். எங்களது கோரிக்கையை ஏற்று நோயை ஆய்வு செய்யும் தொழில்நுட்ப குழுவை அமைத்த மத்திய வேளாண் அமைச்சர் சுவராஜ் சிங் சவுகான், தேசிய தென்னை வளர்ச்சி வாரியத் தலைவர் நாகராஜனுக்கு நன்றி தெரிவிக்கிறோம்.
நோய்க்கான மருந்து இதுவரை நிரூபிக்கப்படவில்லை. அதுவரை காய்ப்புத்திறனுள்ள மரங்களை இழந்தால் தலா ரூ25 ஆயிரம் நிவாரணம், புதிதாக நடவு செய்ய மானியத்தை உயர்த்த வேண்டும் என்றார்.
மேலும்
-
அமெரிக்க அரசு நிர்வாகம் முடங்கியதால் ஆமதாபாத் விபத்து விசாரணையில் தொய்வு
-
வெடி மருந்து ஆலை அமைக்க ஜெர்மன் நிறுவனத்துடன் ஒப்பந்தம்
-
இன படுகொலை நடக்கவில்லை அமெரிக்க மிரட்டலுக்கு பதிலடி
-
செமஸ்டர் முடிவு வெளியான 15 நாட்களுக்குள் துணை தேர்வு
-
அரசு விரைவு பஸ்களில் பொங்கல் முன்பதிவு துவக்கம்
-
பயங்கரவாதி என்ற வார்த்தையை ஆங்கிலத்தில் எழுத தெரியுமா? தேஜஸ்விக்கு அசாதுதீன் ஓவைசி கேள்வி