வடகாடு மலை கிராம பகுதிகளுக்கு பஸ் வசதி அமைச்சர் சக்கரபாணி தகவல்
ஒட்டன்சத்திரம்: 'வடகாடு மலை கிராமப் பகுதிகளுக்கு விரைவில் பஸ் வசதி கிடைக்கும்' என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.
ஒட்டன்சத்திரம் ஒன்றியம் வடகாடு ஊராட்சியில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாமில் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி, மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.37.50 லட்சம் மதிப்பிலான கடன் உதவிகள், பழங்குடியினர் நலவாரிய அட்டைகள் வழங்கி அமைச்சர் சக்கரபாணி பேசியதாவது:
வடகாடு மலைப்பகுதி கிராமங்களுக்கு விரைவில் பஸ் வசதி கிடைக்கும். ஒட்டன்சத்திரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் 12 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் பதிவு அலுவலக கட்டடம் கட்டப்பட்டுள்ளது' என்றார்.
பழநி ஆர்.டி.ஒ., கண்ணன், தாசில்தார் சஞ்சய் காந்தி, உதவி திட்ட இயக்குனர் பிரபாகரன், பி.டி.ஓ.,க்கள் பிரபு பாண்டியன், காமராஜ், ஒன்றிய செயலாளர் பாலு, துணைச் செயலாளர்கள், சிவகுமார் முருகானந்தம், முன்னாள் ஊராட்சி தலைவர் தனலட்சுமி கலந்து கொண்டனர்.
மேலும்
-
அமெரிக்க அரசு நிர்வாகம் முடங்கியதால் ஆமதாபாத் விபத்து விசாரணையில் தொய்வு
-
வெடி மருந்து ஆலை அமைக்க ஜெர்மன் நிறுவனத்துடன் ஒப்பந்தம்
-
இன படுகொலை நடக்கவில்லை அமெரிக்க மிரட்டலுக்கு பதிலடி
-
செமஸ்டர் முடிவு வெளியான 15 நாட்களுக்குள் துணை தேர்வு
-
அரசு விரைவு பஸ்களில் பொங்கல் முன்பதிவு துவக்கம்
-
பயங்கரவாதி என்ற வார்த்தையை ஆங்கிலத்தில் எழுத தெரியுமா? தேஜஸ்விக்கு அசாதுதீன் ஓவைசி கேள்வி