மூளையை தின்னும் அமீபா தொற்றுக்கு 4 பேர் பலி: கேரளாவில் அதிகரிக்கும் அச்சம்
திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த 5 நாட்களில் 4 பேர் மூளையை தின்னும் அமீபா தொற்றில் உயரிழந்துள்ளது , பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த ஆண்டில் இதுவரை , கேரளாவில் 160 பேர் பாதிக்கப்பட்டதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அவர்களில் 37 பேர் உயிரிழந்தனர்.
திருவனந்தபுரம் புறநகர்ப் பகுதியான கொடுமானைச் சேர்ந்த விஜயன் 57, என்பவர் சமீபத்தில் உயிரிழந்தார். அவருக்கு சமீபத்தில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. சிகிச்சையின் போது அவருக்கு அமீபிக் மூளைக்காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.
சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை:
அமீபா மூக்கு வழியாக உடலுக்குள் நுழைகிறது, பொதுவாக மக்கள் மாசுபட்ட குளங்கள், ஏரிகள் அல்லது குளோரின் சேர்க்கப்படாத குளங்களில் நீந்தும்போது அல்லது குளிக்கும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
தேங்கி நிற்கும் நீரில் நீந்துவதைத் தவிர்ப்பது மற்றும் மூக்கைக் கழுவுவதற்கு முறையாக சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை மட்டுமே பயன்படுத்துவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும்.இவ்வாறு சுகாதாரதுறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
கடவுளின் தேசமாக இருந்த வரை நன்றாக இறுந்தது. மத மொழி தேச உணவு பழக்கங்களில் ஏற்பட்டுள்ள பெரும் மாற்றங்கள் மக்கள் உயிர் உறிய ஆரம்பித்து உள்ளன. நல்லதே நடக்கும்மேலும்
-
சாலை விபத்தை தடுக்க சிறப்பு இயக்கம்: ராஜஸ்தான் அரசு இலக்கு
-
அனில் அம்பானிக்கு அடுத்த சிக்கல்: மத்திய அரசும் விசாரணையை துவக்கியது
-
உலகக்கோப்பையுடன் பிரதமரை சந்தித்த இந்திய மகளிர் கிரிக்கெட் அணியினர்!
-
வந்தே மாதரம் 150வது ஆண்டு நிறைவு: கொண்டாட மஹாராஷ்டிராவில் சிறப்பு ஏற்பாடு
-
அதிகரிக்கும் கூட்டநெரிசல் : டில்லியில் நான்கு ரயில் நிலையங்களில் பிளாட்பாரம் டிக்கெட் விற்பனை நிறுத்தம்
-
ரஜினி படத்தை தயாரிக்கும் கமல்: சுந்தர் சி இயக்குகிறார்