பயிற்சியாளர் அமோல் மஜும்தார் பெருமிதம்
நவி மும்பை: இந்திய பெண்கள் அணி பயிற்சியாளர் அமோல் மஜும்தார் 50. மும்பையை சேர்ந்தவர். முதல் தர கிரிக்கெட்டில் 1994-95ல் அறிமுகம் ஆனார். 2013 வரை மும்பை, அசாம், ஆந்திரா அணிகளுக்காக 171 போட்டியில் 30 சதம், 60 அரைசதம் உட்பட 11,167 ரன் குவித்துள்ளார்.
1994ல் இந்திய 19 வயது அணிக்கு துணைக் கேப்டனாக செயல்பட்டார். கங்குலி, டிராவிட்டுடன் இணைந்து இந்திய 'ஏ' அணிக்கு விளையாடி உள்ளார்.
ஆனால் சச்சின், லட்சுமண், டிராவிட் என பல ஜாம்பவான் வீரர்கள், ஆதிக்க செலுத்திய காலம் என்பதால், கடைசி வரை இந்திய அணிக்காக அறிமுக வாய்ப்பு கிடைக்கவில்லை. இதையடுத்து பயிற்சியாளராக அவதாரம் எடுத்தார். 2023ல் இந்திய பெண்கள் அணி பயிற்சியாளர் ஆனார்.
தற்போது இந்திய கிரிக்கெட் வரலாற்றில், பெண்கள் அணி உலக சாம்பியன் ஆன கைகொடுத்த முதல் பயிற்சியாளர் என பெருமை பெற்றுள்ளார்.
இதுகுறித்து மஜும்தர் கூறியது:
கடந்த இரு ஆண்டுகள் அணியுடன் பயணித்தது சிறப்பான அனுபவங்களை கொடுத்துள்ளது. வீராங்கனைகள் அனைவரும் எப்போதும் ஒருங்கிணைந்து செயல்படுகின்றனர். ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக உள்ளனர். யாரும், மற்றவர்களை எதற்காகவும் விட்டுத்தருவது இல்லை.
பயிற்சியை பொறுத்தவரையில் எனக்கு கிடைத்த எந்த ஒரு அனுபவத்தையும் வீராங்கனைகளுடன் பகிர்ந்து கொள்வேன். இதற்காக எப்போதும் தயங்கியது இல்லை. மற்றபடி என்னதான் நான் சாதித்து விட்டேன், வரலாறு படைத்து விட்டேன் என நீங்கள் தெரிவித்தாலும், என்னைப் பொறுத்தவரையில் அனுபவங்களை வீராங்களைகளிடம் பகிர்ந்து கொண்டேன், அவ்வளவு தான்.
பைனலில் ஹர்மன்பிரீத் கவுர், கடைசியாக 'கேட்ச்' செய்ததும், அடுத்த ஐந்து நிமிடம் எல்லாமே மங்கலாகி விட்டது. என்ன நடந்தது என்றே தெரியவில்லை. 'டக் அவுட்டில்' நான் மட்டுமே உட்கார்ந்து இருந்தேன். உலக கோப்பை வென்ற தருணம் அடுத்தடுத்த நாட்களில் மறக்க முடியாத நினைவுகளைத் தரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மூன்றாவது பயிற்சியாளர்
இந்தியாவுக்காக உலக கோப்பை வென்று தந்த மூன்றாவது பயிற்சியாளர் ஆனார் மஜும்தர்.
* 1983ல் கபில் தேவ் தலைமையில் இந்தியா முதல் உலக கோப்பை வென்றபோது பயிற்சியாளர் யாரும் இல்லை.
* 2007ல் தோனி தலைமையில் 'டி-20' உலக கோப்பை வென்ற போது, லால்சந்த் ராஜ்புத், மானேஜராக சென்றார்.
* 2011ல் உலக கோப்பை வென்ற போது பயிற்சியாளராக கிறிஸ்டன் இருந்தார்.
* 2024ல் டிராவிட் பயிற்சியில் இந்தியா 'டி-20' உலக கோப்பை கைப்பற்றியது.
* தற்போது பெண்கள் அணி மஜும்தர், பயிற்சியில் சாதித்துள்ளது.
மேலும்
-
ஹரியானாவில் யாரும் மேல்முறையீடு செய்யவில்லை: ராகுலின் குற்றச்சாட்டை நிராகரித்தது தேர்தல் கமிஷன்
-
கட்டணம் செலுத்தாமல் விமான டிக்கெட்டுகள் ரத்து: புதிய விதிகள் விதித்தது சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம்
-
போஸ்னியாவில் சோகம்: முதியோர் இல்லம் தீப்பிடித்ததில் 11 பேர் பலி
-
உத்தரபிரதேசத்தில் தண்டவாளத்தை கடக்கும் போது விபரீதம்; ரயில் மோதி ஆறு பேர் பலியான சோகம்!
-
ரூ.5.76 லட்சம் மதிப்புள்ள மதுபான பாட்டில்கள் பறிமுதல்: தெலுங்கானாவில் அதிகாரிகள் நடவடிக்கை
-
ராணுவத்திற்கு எந்த மதமோ ஜாதியோ கிடையாது; ராகுலுக்கு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பதிலடி