போஸ்னியாவில் சோகம்: முதியோர் இல்லம் தீப்பிடித்ததில் 11 பேர் பலி
ஹெர்ஸகோவினா (போஸ்னியா): ஐரோப்பிய நாடான போஸ்னியாவில், முதியோர் இல்லத்தில் தீப்பிடித்ததில் 11 பேர் உயிரிழந்தனர்.
இதுபற்றிய விவரம் வருமாறு;
வடக்கு போஸ்னியா நகரம் துஸ்லா. இங்கு முதியோர் இல்லம் ஒன்று உள்ளது. இந்த இல்லத்தின் 7வது தளத்தில் எதிர்பாராத விதமாக தீப்பிடித்தது.
மளமளவென தீ. மற்ற பகுதிகளுக்கும் பரவ தொடங்கியது. அங்கே இருந்தவர்கள் வயது முதிர்வு காரணமாக வெளியில் வரமுடியாமல் தவித்தனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் காவல்துறைக்கும், தீயணைப்புத் துறைக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்த தீயணைப்புத் துறையினர், போலீசார் மீட்பு பணியில் இறங்கினர்.
பல மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இருப்பினும் தீ விபத்தில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
எதனால் தீப்பிடித்தது என்பது பற்றிய காரணம் தெரியவில்லை இருப்பினும் விசாரணை நடத்தி வருவதாக போலீசார் கூறி உள்ளனர். இந்த சம்பவத்தை அறிந்த அந்நாட்டு பிரதமர் நெர்மின் நிக்சிக், இது மிக பெரிய ஒரு பேரழிவு என்று வேதனை தெரிவித்துள்ளார்.
மேலும்
-
மருத்துவமனையில் தீ
-
l ↓கண்மாய்க்கு சொட்டு நீர்கூட வரவில்லை l ↓இளையான்குடி கிராம மக்கள் கவலை
-
அருப்புக்கோட்டையில் கோயில்கள் அருகே டாஸ்மாக்; தள்ளாடும் குடிமகன்களால் பெண் பக்தர்கள் வேதனை
-
38 வயது பெண் 'டார்ச்சர்' 19 வயது வாலிபர் தற்கொலை
-
சத்தீஸ்கர் ரயில் விபத்து பலி 11 ஆக உயர்வு
-
ரோடுகளில் திரியும் மாடுகள்.. அதிகாரிகள் அசட்டையால் அல்லல்