4 மணி நேரம் 25 நிமிடம் என்ன செய்தது போலீஸ்: கோவை பாலியல் வழக்கில் இபிஎஸ் கேள்வி
சென்னை: இரவு 11:35 மணி முதல், அதிகாலை 4 மணி வரை, 4 மணி நேரம் 25 நிமிடம் என்ன செய்துகொண்டு இருந்தது போலீஸ்? என்று கோவை பாலியல் வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தெரிவித்து உள்ளார்.
அவரது அறிக்கை: கோவை கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு பற்றி விளக்கம் அளித்த கோவை போலீஸ் கமிஷனர் சரவணசுந்தர், ஞாயிற்றுக் கிழமை இரவு 11:20 மணிக்கு போலீசாருக்கு மாணவியின் நண்பர் தொடர்பு கொண்டு உதவி கோரியதாகவும், 11:35 மணிக்கு சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மறுநாள் அதிகாலை 4 மணிக்கு தான் மாணவியைக் கண்டதாகவும், அதுவும் அம்மாணவி தானாக வந்து சேர்ந்ததாகவும் தெரிவித்தார்.
இரவு 11:35 மணி முதல், அதிகாலை 4 மணி வரை, 4 மணி நேரம் 25 நிமிடம் என்ன செய்துகொண்டு இருந்தது போலீஸ்? என்பதே தற்போது எழுந்துள்ள கேள்வி. குற்றவாளிகளை பிடித்துவிட்டதாக தம்பட்டம் அடித்துக்கொள்ளும் முதல்வர் ஸ்டாலின், தனது போலீசாரால் சம்பவ இடத்தில் நின்றுக்கொண்டே நான்கரை மணி நேரம் பாதிக்கப்பட்ட மாணவியை கண்டுபிடிக்க வக்கில்லாமல் போனதற்கு வெட்கித் தலைகுனிய வேண்டும்.
100 போலீசார் இணைந்து பெரிய தேடுதல் வேட்டை நடத்தியதாக காவல் கமிஷனர் சொல்கிறார். நான்கரை மணி நேரம், 100 போலீசாரால் சம்பவ இடத்தில் இருந்த பாதிக்கப்பட்ட மாணவியை கண்டுபிடிக்க முடியவில்லை என்பது அதிர்ச்சியாக இருக்கிறது.
போலீசாரால் கண்டுபிடிக்க முடியாத இடத்திற்கு மாணவி எப்படி சென்றார்? என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு, "சிறிய சுவர் ஒன்று இருந்தது. அதை தாண்டிச் சென்றதால் கண்டுபிடிக்க முடியவில்லை" என்ற போலீஸ் கமிஷனர், சில நிமிடங்களில், "மிகப்பெரிய சுவர் இருந்தது; அதை தாண்டிச் சென்று அந்த மாணவி இருந்தார் " என தனது கருத்தை மாற்றினார்.
அங்கு இருந்தது சிறிய சுவரா? பெரிய சுவரா? ஏன் அதைத் தாண்டி காவல்துறை, அதுவும் 100 பேர் கொண்ட படை, சென்று தேடவில்லை? "இருள் சூழ்ந்த தனிமையான இடம் என்பதால் பாதிக்கப்பட்ட மாணவியை கண்டுபிடிக்க முடியவில்லை" என்ற விளக்கத்தை அளிக்கவே திமுக அரசின் போலீசார் கூச்சப்பட வேண்டும்.
நள்ளிரவில் ஒரு பெண்ணை சம்பவ இடத்தில் தேடிக் கண்டுபிடிக்க திமுக அரசின் போலீசாருக்கு துப்பில்லை என்று ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கிறதா திமுக அரசு?இந்த சூழலில், "ஆக... குற்றவாளிகள் கைது, குற்றப் பத்திரிகை ஒரு மாதத்தில் தாக்கல் செய்து விடுவோம்" என்று பெருமை பேசுகிறார் முதல்வர் ஸ்டாலின். அதற்கு முன்னால், உங்கள் போலீசார் 4 மணி நேரம் 25 நிமிடம் பாதிக்கப்பட்ட மாணவியைக் கண்டுபிடிக்க வக்கில்லாமல் போனது ஏன்? என்பது பற்றி விளக்கம் அளிக்க வேண்டும். ஏனென்றால், In case you've forgotten, போலீசார் உங்கள் கட்டுப்பாட்டில் தான் உள்ளது (ஏட்டளவில்). இவ்வாறு இபிஎஸ் கூறியுள்ளார்.
வாசகர் கருத்து (19)
என்றும் இந்தியன் - Kolkata,இந்தியா
05 நவ,2025 - 17:04 Report Abuse
4 மணி நேரம் 25 நிமிடம் என்ன செய்தது போலீஸ்: கோவை பாலியல் வழக்கில் இபிஎஸ் கேள்வி. பதில் : திமுக கழகத்திலிருந்து உத்தரவு வரும்வரை துறை காத்திருந்தது 0
0
Reply
மனிதன் - riyadh,இந்தியா
05 நவ,2025 - 16:37 Report Abuse
ஆமா, இவரு மட்டும் இருந்து இருந்தா அப்படியே அறுத்து தள்ளியிருப்பாரு... கேவலமா இல்லையா? இதெல்லாம் ஒரு பொழப்பு... அதிமுகவுக்கு சங்கு ஊதி ரொம்ப நாளாச்சு... 0
0
Reply
Padmanaban Arumugam - india,இந்தியா
05 நவ,2025 - 16:35 Report Abuse
பதில் வேற லெவல்.. Police has done excellent job. அவர்கள் வெறியர்களை உடனடியாக கண்டிடுபிடித்துஇருக்கிறார்கள் அவர்களை வாழ்த்தாமல் இருந்தால்கூட வசை பாடாமல் இருந்தால் நல்லது. நமது போலீஸ் பேசுந்த்தூள் போர்த்திய கவர்களை எப்படி கண்டு பிடிப்பது என்று கொஞ்சம் ட்ரைனிங் எடுக்க வேண்டும். 0
0
Reply
தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா
05 நவ,2025 - 15:21 Report Abuse
அந்த தம்பியை காப்பாற்ற பழைய குற்றவாளிகள் பட்டியலை எடுத்து அந்த 3 பேருக்கும் பணம் கொடுத்து அவர்களை தயார்படுத்த நேரம் வேண்டும். 0
0
Reply
திகழ்ஓவியன் - AJAX ONTARIO,இந்தியா
05 நவ,2025 - 13:24 Report Abuse
காரில் கூட்டிக் கொண்ட சென்ற ஆண் நண்பர் மீதுதான் தவறு , இதற்கு காரணம். . . 0
0
தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா
05 நவ,2025 - 15:22Report Abuse
உங்க தலைவன் அன்று செய்ததை உங்கள் தொண்டன் இன்று செய்கிறான் மக்கள் முட்டாளாக உள்ளவரை உங்க வன்டி ஓடும் 0
0
Reply
PALANISWAMY - COIMBATORE,இந்தியா
05 நவ,2025 - 13:16 Report Abuse
இவரெல்லாம் தலைவர் என நினைத்து ஒரு கூட்டமும் இருக்கிறது. 0
0
Reply
Vasan - ,இந்தியா
05 நவ,2025 - 13:14 Report Abuse
2026ல் எடப்பாடி கட்சி எத்தனை தொகுதிகளில் டெபாசிட் தொகை திரும்பப்பெறும் என்று நினைக்கிறீர்கள்? 0
0
mohana sundaram - ,
05 நவ,2025 - 16:19Report Abuse
50 தொகுதிகளில். 0
0
Reply
Senthoora - Sydney,இந்தியா
05 நவ,2025 - 12:42 Report Abuse
பெரிய கண்டுபிடிப்பு, இவரெல்லாம் இதை கேட்க தகுதி இல்லை, பொள்ளாச்சி நடந்தபோது இப்படியா நடந்திங்க, தவேக உடன் சேர்ந்து கூட்டணி வேலையை பாருங்க, இல்லையேல் இப்போ தவேக திமுக உடன் டீல் நடக்குது. உங்க கட்சி அம்போ, 0
0
தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா
05 நவ,2025 - 15:23Report Abuse
உனக்கு தங்கட்சி இல்லாத தருதலையா? 0
0
Reply
Indian - kailasapuram,இந்தியா
05 நவ,2025 - 12:39 Report Abuse
இந்த கேள்வியை பொள்ளாச்சி பாலியல் வழக்கில் போய் கேளுங்கள் 0
0
Reply
T.sthivinayagam - agartala,இந்தியா
05 நவ,2025 - 12:13 Report Abuse
உங்களை போல் அவர்கள் டீவி பார்த்து தெரிந்து கொள்ளவில்லை. 0
0
Reply
மேலும் 6 கருத்துக்கள்...
மேலும்
-
சாலை விபத்தை தடுக்க சிறப்பு இயக்கம்: ராஜஸ்தான் அரசு இலக்கு
-
அனில் அம்பானிக்கு அடுத்த சிக்கல்: மத்திய அரசும் விசாரணையை துவக்கியது
-
உலகக்கோப்பையுடன் பிரதமரை சந்தித்த இந்திய மகளிர் கிரிக்கெட் அணியினர்!
-
வந்தே மாதரம் 150வது ஆண்டு நிறைவு: கொண்டாட மஹாராஷ்டிராவில் சிறப்பு ஏற்பாடு
-
மூளையை தின்னும் அமீபா தொற்றுக்கு 4 பேர் பலி: கேரளாவில் அதிகரிக்கும் அச்சம்
-
அதிகரிக்கும் கூட்டநெரிசல் : டில்லியில் நான்கு ரயில் நிலையங்களில் பிளாட்பாரம் டிக்கெட் விற்பனை நிறுத்தம்
Advertisement
Advertisement