2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1360 சரிவு: ஒரு சவரன் ரூ.89,440க்கு விற்பனை
சென்னை: சென்னையில் இன்று (நவ.,05) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து ஒரு சவரன் ரூ.89,440க்கு விற்பனை ஆகிறது.
சர்வதேச நிலவரங்களால், நம் நாட்டில் தங்கம் விலையில் அதிக ஏற்ற, இறக்கம் காணப்படுகிறது. தமிழகத்தில் கடந்த சனிக்கிழமை (நவ.1) ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ரூ.90,480க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,310க்கு விற்பனை ஆனது. அதேபோல் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.166க்கு விற்பனை ஆனது.
நேற்று முன்தினம் (நவ.,03) தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 அதிகரித்து ஒரு சவரன் ரூ.320 அதிகரித்து ஒரு சவரன் ரூ.90,800க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11.350க்கு விற்பனை ஆனது.
நேற்று (நவ., 04) ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்து ஒரு சவரன் ரூ.90 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.165 குறைந்து, ஒரு கிராம் ரூ.11,250க்கு விற்பனை ஆனது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 குறைந்து ஒரு கிராம் ரூ.165க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று (நவ.,05) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து ஒரு சவரன் ரூ.89,440க்கு விற்பனை ஆகிறது.
கிராமுக்கு ரூ.70 குறைந்து ஒரு கிராம் ரூ.11,180க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 குறைந்து ஒரு கிராம் ரூ.163க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த 2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1360 குறைந்து நகைப்பிரியர்களுக்கு சற்று ஆறுதலை கொடுத்துள்ளது.
மேலும்
-
கூட்டணி பற்றி முடிவு எடுக்க விஜய்க்கு அதிகாரம்: தவெக சிறப்பு பொதுக்குழுவில் தீர்மானம்
-
அமெரிக்க பொருட்கள் மீதான 24% வரிவிதிப்பு நிறுத்தம்: சீனா அறிவிப்பு
-
சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதல்; பலி 11 ஆக உயர்வு; உயிர் பிழைத்தவர்கள் பகீர் தகவல்
-
அமெரிக்க தேர்தலில் டிரம்ப் கட்சி படுதோல்வி
-
4 மணி நேரம் 25 நிமிடம் என்ன செய்தது போலீஸ்: கோவை பாலியல் வழக்கில் இபிஎஸ் கேள்வி
-
நியூயார்க் நகர மேயர் தேர்தலில் வெற்றி பெற்றார் வம்சாவளி இந்தியர் ஜோஹ்ரான் மம்தானி