நியூயார்க் நகர மேயர் தேர்தலில் வெற்றி பெற்றார் வம்சாவளி இந்தியர் ஜோஹ்ரான் மம்தானி
வாஷிங்டன்: அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயர் தேர்தலில், ஜனநாயக கட்சி வேட்பாளரும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான ஜோஹ்ரான் மம்தானி வெற்றி பெற்றார்.
அமெரிக்காவில் மிக முக்கியமான பிரபலமான நகரம் தான் நியூயார்க். இந்த நகரத்தின் மேயராக இருந்த ஜனநாயக கட்சியைச் சேர்ந்த எரிக் ஆடம்ஸ் ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் இந்த நகரத்திற்கு மேயர் தேர்தல் அறிவிக்கப்பட்டது.
தேர்தல் மும்முனைப் போட்டி நிலவியது.
ஜனநாயகக் கட்சி சார்பில் உகாண்டாவில் பிறந்து நியூயார்க் நகரில் வளர்ந்த 34 வயதான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜோஹ்ரான் மம்தானி போட்டியிட்டார். அவரை எதிர்த்து டிரம்ப்பின் குடியரசுக் கட்சி சார்பில் கர்டிஸ் ஸ்லிவா போட்டியிட்டார். அதேபோல நியூயார்க்கின் முன்னாள் கவர்னர் ஆண்ட்ரூ கியூமோ சுயேச்சையாக களம் இறங்கினார்.
அக்., 25ம் தேதி ஓட்டுப்பதிவு தொடங்கி, நவ.,4ம் தேதி வரை நடந்தது. அனைத்து வேட்பாளர்களும் பொதுமக்கள் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என அழைப்பு விடுத்தனர். தற்போது தேர்தல் முடிவுகள் வெளியானது.
நியூயார்க் நகர மேயர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளரும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான ஜோஹ்ரான் மம்தானி மாபெரும் வெற்றியை பதிவு செய்து, நகரத்தின் புதிய மேயராகத் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.
இந்த வெற்றியின் மூலம், நியூயார்க் நகரத்தின் அரசியல் வரலாற்றிலேயே முதல் இந்திய-அமெரிக்க முஸ்லிம் மேயர் என்ற வரலாற்றுச் சாதனையை ஜோஹ்ரான் மம்தானி மாம்டானி படைத்துள்ளார். அமெரிக்காவின் முக்கிய அரசியல் பதவிகளில் இளம் வயதிலேயே (34) இவர் பொறுப்பேற்றுள்ளது பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. இவர் நடத்திய தீவிர தேர்தல் பிரச்சாரம் இவருக்கு இந்த மாபெரும் வெற்றிக்கு வழி வகுத்து இருக்கிறது.
ஜோஹ்ரான் மம்தானி அதிபர் டிரம்பின் கொள்கைகளையும், டிரம்பையும் கடுமையாக விமர்சித்து இருந்தார். ஏனெனில் நியூயார்க் நகரம் அமெரிக்காவின் மிக முக்கியமான நகரமாகும். இந்த நகரில் நடக்கும் அரசியல் மாற்றம், நாடு முழுவதும் எதிரொலிக்கும். இந்த தேர்தல் சர்வதேச கவனத்தை பெற்றது. வெற்றி வாகை சூடிய, ஜோஹ்ரான் மம்தானிக்கு அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
நிதி தரமாட்டேன்!
மேயர் தேர்தலில் ஜோஹ்ரான் மம்தானி வெற்றி பெற்றால் நியூயார்க் நகரத்திற்கான நிதியை நிறுத்துவேன் என அதிபர் டிரம்ப் அச்சுறுத்தி இருந்தார். ஒரு கம்யூனிஸ்ட் தலைமையில் இருந்தால் அது மோசமாகிவிடும். அவர் திறமையானவர் இல்லை.
உலகின் மிகப்பெரிய நகரத்தின் மேயராக, மம்தானியை கொண்டுவர முடியாது என அதிபர் டிரம்ப் கூறியிருந்தார். தற்போது மம்தானியின் வரலாற்று வெற்றி, அதிபர் டிரம்ப் அச்சுறுத்தல் புஸ்வாணம் ஆனது.
நியூயார்க் நகர மேயர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளரும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான ஜோஹ்ரான் மம்தானி மாபெரும் வெற்றியை பதிவு செய்து நகரத்தின் புதிய மேயராகத் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்அவருக்கு வாழ்த்துக்கள் இதன் மூலம் கம்யூனிசத்திற்கு உயிர் இருக்கு என்பது தெளிவாகி உள்ளது ..Jaihind
இவன் உண்மையான இந்தியனா இருந்தா இந்தியாவில் இந்திய மக்களுக்காக தேர்தலில் ஜெயித்து சேவை பண்ணட்டுமே
த்ரும்பின் சமீபத்திய அதிரடி நடவடிக்கைகளுக்கு அமெரிக்கர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வரி விதிப்பு சாதாரண அமெரிக்கனை மிகவும் பாதித்துள்ளது.
முற்றிலும் சரி
இந்திய வம்சாவளியா இவர் ஆப்பிரிக்கா உகாண்டா நாட்டில் பிறந்தவராச்சே எப்படி இந்தியர் ஆக முடியும் ஹாஹாஹா
மோடியை கடுமையாக விமர்சிக்கக் கூடியவர், இவரது தந்தை குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர். இதையெல்லாம் விட்டு விட்டீர்களே.
என்னடா இது நியூயோர்க்குக்கு கேட்ட நேரம் . க்ரூமிங் கெங் முழு பலத்தோடு செயல் படும்
மர்ம நபர் இந்தியாவுக்கும், இந்தியா மக்களுக்கும் எதிரான கொள்கையை கொன்றவர். தீவிரவாதத்தை ஆதரிக்கும் நபர். பாகிஸ்தானிய நண்பர். இதிலே என்ன இந்திய வம்சாவளி என்ற வியாக்கியானம்.
நியூயார்க் மேயர் பதவி மண்ணின் மைந்தருக்கே என்று அங்கே யாரும் கொடி பிடிக்கலையாக்கும். நம்மளை மாதிரித்தான். வந்தாரை மட்டுமே வாழவைக்கும் தமிழ்நாடு போல.
டாஸ்மாக் டுமிழன் கொத்தடிமையா வாழ பழகி கொண்டவன் ஓவாவுக்கு ஓட்டு போடும் கும்பிடு சாமிகள்
இந்திய வம்சாவளி என்றாலே டிரம்புக்கும், ராகுலுக்கும் எரிச்சலாக இருக்குமே !! அதிலும் ராகுலுக்கு ஒரு விதத்தில் தேர்ந்தேடுக்கப்பட்டவர் ஒரு முஸ்லீம் என்பதால் சற்று ஆறுதலாக இருக்கும். குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பவராயிற்றே !!!!!
அம்மா மீரா நாயரா ?
இந்தியாவிற்கு எதிரா செயல்படுபவர் எனவே ராகுலுக்கு பிடிக்கும்.
அம்மா மீரா நாயர். கேவலமான கலாச்சார சீர்கேடு படங்களை எடுத்த நபர்.
More a mulim than a person with Indian Origin. Indians and Hindus more particuarly be ware of what is ahead of youமேலும்
-
கூட்டணி பற்றி முடிவு எடுக்க விஜய்க்கு அதிகாரம்: தவெக சிறப்பு பொதுக்குழுவில் தீர்மானம்
-
அமெரிக்க பொருட்கள் மீதான 24% வரிவிதிப்பு நிறுத்தம்: சீனா அறிவிப்பு
-
சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதல்; பலி 11 ஆக உயர்வு; உயிர் பிழைத்தவர்கள் பகீர் தகவல்
-
அமெரிக்க தேர்தலில் டிரம்ப் கட்சி படுதோல்வி
-
4 மணி நேரம் 25 நிமிடம் என்ன செய்தது போலீஸ்: கோவை பாலியல் வழக்கில் இபிஎஸ் கேள்வி
-
2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1360 சரிவு: ஒரு சவரன் ரூ.89,440க்கு விற்பனை