பட்டீஸ்வரம் கோவிலில் பணிபுரிய ஈ.வெ.ரா., பற்றி தெரிய வேண்டுமாம்; அறநிலையத்துறையின் உச்சகட்ட அபத்தம்
கோவை: பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப நேற்று நடந்த நேர்காணலில், 'ஈ.வெ.ரா. பற்றி உங்களுக்கு தெரிந்ததை சொல்லுங்கள்' என, அறநிலையத்துறை அதிகாரிகள் கேள்வி எழுப்பியது ஆன்மிகவாதிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலைச்சிதம்பரம் என்றழைக்கப்படும் பேரூர் பட்டீஸ்வரர் கோவில் புகழ் பெற்றது. சைவ சமயக்குறவர்களான ஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வரால் பாடப்பட்ட புகழ் பெற்ற ஸ்தலம். இக்கோவிலில் இளநிலை எழுத்தர் இருவருக்கும், பதிவறை எழுத்தர் ஒருவருக்கும், சீட்டு விற்பனையாளர் ஒருவர், இரு துாய்மைப்பணியாளர் ஆகிய பணியிடங்களுக்கு நேர்காணல் நடந்து வருகிறது.
நேற்று நடந்த நேர்காணலில், 375 பேர் பங்கேற்றனர். அவர்களிடம் கோவில் உதவி கமிஷனர் மற்றும் அதே அந்தஸ்திலுள்ள அறநிலையத்துறை அதிகாரிகள் கேள்விகளை கேட்டனர்.
அப்போது, 'ஈ.வெ.ரா. பற்றி உங்களுக்கு தெரிந்ததை சொல்லுங்கள்? ஈ.வெ.ரா.வின் பொன்மொழிகளில் உங்களை கவர்ந்தது எது? திராவிட மாடல் அரசு, தமிழகத்தில் ஆன்மிகத்திற்கு செய்த பணிகள் என்ன?' போன்ற கேள்விகளை கேட்டனர். இதற்கு பதில் சொல்ல முடியாமல் பங்கேற்ற பலரும் தடுமாறினர். நேர்காணலில் பங்கேற்றவர்கள் கூறுகையில், 'ஆன்மிகத்துக்கும், ஈ.வெ.ரா.வுக்கும் என்ன சம்மந்தம்? கடவுள் இல்லை என்று சொன்னவரை பற்றி, வேலை தேடி வருவோரிடம் கேள்வி எழுப்பினால் எப்படி? கோவில் சம்மந்தமாகவோ, சைவ சமயம் சார்ந்த அல்லது ஆன்மிகம் சார்ந்த கேள்வி எழுப்பினால், நாங்கள் பதில் சொல்லியிருப்போம்' என்றனர்.
தமிழகத்தில் இந்துக்களும், இந்து அமைப்புக்களும், பலதரப்பட்ட மடங்களும், ஆன்மீகவாதிகளும் அமைதியாக இருப்பதால் தான் இம்மாதிரி அவலங்கள் தலைவிரித்தாடுகின்றன. இதுவே மற்ற மத வழிப்பாட்டு தளங்களில் செய்தால் என்ன நடக்கும்?
இப்போது புரிகிறதா பிஜேபி ஏன் ஆட்சிக்கு வரவேண்டும் என்று. நமது நம்பிக்கை மற்றும் ஆன்மீகத்தை பிஜேபி மட்டுமே காப்பாற்ற முடியும்
கேள்வி கேட்ட வரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்.
இந்துசமய துரோகத்துறையை மறு சீரமைக்க வேண்டும் இந்துக்கள் பெயரில் அந்நிய மதத்தவங்க பணிபுரிந்தால் இப்படித்தான் கேள்வி கேட்பாங்க
முட்டாள்தனமான கருத்து இது
கேள்வி கேட்க வேண்டிய அதிகாரிகளுக்கு பெரியார் பற்றி மட்டுமே தெரியும் போல.... வேற எதுவும் தெரியாத திமுக முன்னேற்ற அதிகாரிகள்....
இது அபத்தமில்லையே.. கடவுள் இல்லை என்று சொன்னவர் அவர். ஆனால் கடவுளை உணரத்தான் கோவில்கள், இதில் வேலை செய்பவர்கள் ஒவ்வொருவர் மூலமாகவும் மக்கள் கடவுளை உணரவேண்டும் ஆனால் கடவுள் இருக்கிறார் என்று சொல்லிக்கொள்ளும் பலரும் மோசடிகளை பணத்துக்காக கோவில்களையே வியாபாரமாக்கி உள்ளனர். கடவுள் இல்லையென்று சொன்னவர் கெட்டவரா அல்லது கடவுளை உணர முடியுமென்று சொல்லிக்கொண்டு மக்களை பணத்துக்காக கோவில்களில் ஏமாற்றுபவர்கள் கெட்டவர்களா.. அரசியல்வாதி வருகிறாரென்று சாதாரண மக்களையும் வரவிடாமல் கோவில்களில் நேரத்தை மாற்றியது அபத்தமில்லயா. சட்டமும் கடவுளும் பணம், அதிகாரமுள்ளவர்களுக்கு நெருங்கி வருவது ஏன்..
Oruvelai
கோவில் உதவி கமிஷனர் மற்றும் அதே அந்தஸ்திலுள்ள அறநிலையத்துறை அதிகாரிகள், மற்றும் அதே மனநிலை உள்ள மற்ற அதிகாரிகள் அனைவரும் உடனே பதவி நீக்கம் செய்யப்படவேண்டும். அவர்களை மசூதி அல்லது கிறிஸ்துவ தேவாலயத்தில் பணியில் அமர்த்தவேண்டும். அங்கு அப்படி அவர்கள் பேசினால், அவர்கள் உயிருக்கு நான் உத்தரவாதம் இல்லை.
ஏன் தெரிந்துகொள்ளவேண்டும்மேலும்
-
வேட்பாளர் வாய்ப்புக்கு 'பென் டீமிடம்' 'இன்புளுயன்ஸ்' செய்யும் தி.மு.க.,வினர்; 'போட்டுக்கொடுக்கும்' அரசியலும் ஜரூர்
-
ட்ரையம்ப் 'ஸ்பீடு ட்ரிபிள் 1200 ஆர்.எக்ஸ்.,' 3.2 வினாடியில், 100 கி.மீ., வேகம்
-
'மினி கன்ட்ரிமேன் ஜே.சி.டபுள்யூ., ஆல்4' பெட்ரோல் மாடலில் முதல் முறையாக அறிமுகம்
-
டாடாவின் 'ஏசி' சொகுசு பஸ்
-
கவாசாகி ஆப்ரோடு பைக்கிற்கு 7 ஆண்டு 'வாரன்டி' நீ்ட்டிப்பு வசதி
-
இம்மாத அறிமுகங்கள்