பெண்கள் பற்றி ஆபாச பேச்சு; பறித்த பதவியை பொன்முடிக்கு மீண்டும் வழங்கியது திமுக தலைமை!
சென்னை: பெண்களை பற்றி அச்சில் ஏற்ற முடியாத வகையில் ஆபாசமாக பேசியதற்காக பறிக்கப்பட்ட கட்சிப்பதவி, மீண்டும் பொன்முடிக்கு வழங்கப்பட்டுள்ளது. திமுக தலைமையின் இந்த முடிவு, இணையத்தில் நெட்டிசன்கள் மத்தியில் கடும் விமர்சனத்தை கிளப்பியுள்ளது.
பொன்முடி, திமுகவில் துணை பொதுச்செயலாளர் ஆகவும், வனத்துறை அமைச்சராகவும் பதவி வகித்து வந்தார்.
கடந்த ஏப்ரல் மாதம் விழுப்புரத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பெண்கள் குறித்து ஆபாசமாகவும், சைவம், வைணவத்தை அவமதிக்கும் வகையிலும் பேசினார். இது குறித்த வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலானது.
பொன்முடி பேசியது என்ன
ஈ.வெ.ராமசாமி பெயரில் எத்தனை இயக்கங்கள் இருந்தாலும், 'பெரியாரிஸ்ட்' என்ற அடிப்படையில், அனைவரும் அவரது கொள்கையை ஏற்று செயல்படுகிறோம். இது தான் ஈ.வெ.ராமசாமிக்கு கிடைத்த பெருமை. பெரியாரிஸ்ட் என்ற கொள்கையுடன் வாழ்ந்தால், சிறப்பாக வாழ முடியும். இயக்க ரீதியாக பிரிந்து செயல்பட்டாலும், ஈ.வெ.ராமசாமியை மறுக்கவோ, மறக்கவே முடியாது.
நான், 1984ல் தி.மு.க.,வில் இணைந்ததாக இங்கு பேசிய இயக்குனர் தெரிவித்தார்; அது தவறு. கடந்த 1971ல், நான் அண்ணாமலை பல்கலையில் படித்து கொண்டிருந்த போது, திராவிட மாணவர் முன்னேற்ற கழகத்தில் இருந்தவன். படித்து முடித்து கல்லுாரி பேராசிரியராக பணியாற்றினேன்.
அப்போது 'அடல்ட்ஸ் ஒன்லி' பட்டிமன்றங்கள் நடத்தப்படும். பட்டிமன்றத்தின் தலைப்பு என்ன தெரியுமா... 'கடவுள் கொள்கையை பரப்புவதில் காமச்சுவை அதிகம் கையாண்டது சைவமே, வைணவமே' என்பது தான்.
அந்த பட்டிமன்றங்களுக்கு, செல்வேந்திரன் நடுவர்; நானும், சபாபதி மோகனும் பேசுவோம். காமச்சுவை பரப்புவது குறித்து இங்கே பேசலாமா... இங்கு பெண்கள் கொஞ்சம் பேர் உள்ளனர்; பெண்கள் யாரும் தப்பாக நினைக்க வேண்டாம்.
அச்சிடத் தகாத வார்த்தை
விலை மாது வீட்டிற்கு ஒருவன் போகிறான். அந்த வீட்டில் இருந்த பெண், அவனிடம், 'நீங்கள் சைவமா, வைணவமா' எனக் கேட்டார். அவனுக்கு ஒன்றும் புரியவில்லை.
'பணம் இவ்வளவுன்னு கேட்டால் சரி... என்னடா இது, சைவமா, வைணவமா எனக் கேட்கிறாரே...' என, அவன் குழம்புகிறான். அந்த அம்மா சொல்லிச்சு, சைவம்னா இப்படி , (நெற்றியில் பட்டை போடுவது போல் சைகை காட்டுகிறார் ) படுத்துக்** *(அச்சிடத் தகாத வார்த்தை) வைணவம்னா (நாமம் போடுவது போல் சைகை காட்டுகிறார்) நின்னுக்கிட்** *(அச்சிடத் தகாத வார்த்தை) நின்னுக்கின்*னா அஞ்சு, படுத்தா * 10 ) என சொன்னார். இவ்வாறு அவர் பேசி உள்ளார்.
எதிர்ப்பு
அருவருக்கத்தக்க வகையிலும், நாராச நடையிலும் பொன்முடி பேசியதற்கு திமுகவினர் உட்பட அனைத்து கட்சியினரும் கண்டனம் தெரிவித்தனர். பெண்கள் மத்தியிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனையடுத்து அவரது கட்சிப் பதவியான துணைப்பொதுச்செயலாளர் பதவியில் இருந்து கடந்த ஏப்ரல் 11ம் தேதி நீக்கப்பட்டார். அதன் பிறகு அவர் அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார்.
இந்நிலையில் அவரது கட்சிப் பதவி பறிக்கப்பட்டு ஏழு மாதம் ஆன நிலையில் மீண்டும் பொன்முடிக்கு துணைப்பொதுச்செயலாளர் பதவியை திமுக மேலிடம் வழங்கியுள்ளது. திமுக தலைமையின் இந்த முடிவு, இணையத்தில் நெட்டிசன்கள் மத்தியில் கடும் விமர்சனத்தை கிளப்பியுள்ளது.
தேர்தல் வர உள்ளது. சுருட்டி வைத்துள்ள பணம் தேவைப்படும் அதனால மீண்டும் பதவி.
திராவிடம் என்றாலே கச்சடா
தமிழர்கள் இந்துக்களா ஓரு பட்டிமன்றம் நடக்கும்..கோர்ட். போலீஸ் ரிப்போர்ட் அவர்களும் அது செம்மொழி மாநாடு என்பர்....தெய்வம் நின்று கொல்லும்...அது. வெற்று பழமொழி இல்லை
அடிமைகளுக்கு இப்போதாவது புத்தி வருமா...
திமுக தலைமையால் யார் மீதும் நடவடிக்கை எடுக்க முடியாது. எல்லாமே அடிக்கிற மாதிரி அடிக்கிறேன் அழுகிற மாதிரி அழு ட்ராமாதான். அதுவும் இந்து மத நம்பிக்கைகளை கிண்டல் செய்தால் எந்த நடவடிக்கையும் கிடையாது
கேவலப் பிறவியின் கட்சியில் ஒரு கேவலப் பிறவிக்கு பதவி. 4 மாதத்தில் விரட்டியடிப்போம் இந்த கயவஞ்சகக் கூட்டத்தை
சூப்பர்... இன்னும் 6 மாசம் இருக்கு... மக்களுக்கு கோபம் வந்தாலும் ஒன்னும் பிரச்னை இல்லை... ஒரு பொட்டலத்துக்கு ரெண்டு பொட்டலம் பிரியாணி கொடுத்தா முடிஞ்சுது...
கட்சி பதவிகள் மட்டுமல்ல, சொறியான் விருது, கொண்ணா விருது, கொலைஞன் விருதுகளையும் கொடுத்து திராவிட மாடல் கௌரவ படுத்தலாம். விருதுகளுக்கு கௌரவம் கிடைக்கும்
இனி ஆபாச திமுக என்று மீடியா அழைக்க வேண்டும்
திராவிட பலாத்கார ஆட்சியில் கோவையில் நடந்ததில் ஆச்சரியமென்ன?