பளுதுாக்குதல்: சிக்கலில் மீராபாய்
புதுடில்லி: இந்திய பளுதுாக்குதல் வீராங்கனை மீராபாய் சானு 31. வழக்கமாக 48 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்கிறார். டோக்கியோ ஒலிம்பிக்கில் (2021), 49 கிலோ பிரிவில் வெள்ளி வென்றார். இந்த ஆண்டு 48 கிலோ பிரிவில் காமன்வெல்த் (தங்கம்), உலக சாம்பியன்ஷிப்பில் (வெள்ளி) பதக்கம் கைப்பற்றினார். அடுத்து லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் (2028) சாதிக்க தயாராகி வருகிறார்.
தற்போது, ஒலிம்பிக் பளுதுாக்குலில் இடம் பெற்ற பிரிவுகள் குறித்து அறிவிப்பு வெளியாகின. இதன் படி, 49 கிலோ பிரிவு நீக்கப்பட்டுள்ளது. இதனால் மீராபாய் சானு, 53 கிலோ பிரிவில் பங்கேற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
தேசிய பயிற்சியாளர் விஜய் சர்மா கூறுகையில்,''புதிய எடை பிரிவு மீராபாய் சானுவுக்கு சாதகமானது தான். இருப்பினும் வரும் ஆசிய விளையாட்டு முடியும் வரை, இவர், 48 கிலோ போட்டிகளில் தான் பங்கேற்பார். இதன் பின் எடையை அதிகரித்து, ஒலிம்பிக் போட்டிக்கு தயாராக வேண்டும்,'' என்றார்.
மேலும்
-
பதவி விலக தயாராக உள்ளேன் அமைச்சர் முன் மா.செ., குமுறல்
-
தி.மு.க.,வில் மனோஜ் பாண்டியன் ஐக்கியம் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்தார்
-
தி.மு.க எம்.எல்.ஏ., மருத்துவமனையை காப்பாற்ற சூழ்ச்சி: பழனிசாமி
-
35வது நாளாக காசில்லை; பணமில்லை 'சாதனை படைக்கிறார்' அமெரிக்க அதிபர்
-
விவசாயிகள் வயிற்றில் அடிக்கலாமா?
-
பட்டீஸ்வரம் கோவிலில் பணிபுரிய ஈ.வெ.ரா., பற்றி தெரிய வேண்டுமாம்; அறநிலையத்துறையின் உச்சகட்ட அபத்தம்