வீடுகளுக்கு 3 மணி நேரம் இலவச மின்சாரம்: ஆஸ்திரேலியா திட்டம்
பெர்த்: வீடுகளுக்கு தினமும் 3 மணி நேரம் இலவச மின்சார வழங்கும் சோலார் ஷேரர் திட்டத்தை ஆஸ்திரேலியா அரசு அறிமுகப்படுத்த உள்ளது.
ஆஸ்திரேலியாவில் 2026 ஆம் ஆண்டில் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படும் எரிசக்தி சேமிப்பு திட்டத்தின் கீழ், சூரிய மின்சக்தி பேனல்கள் இல்லாத வீடுகள் உள்பட, அனைத்து வீடுகளுக்கும் தினமும் குறைந்தது மூன்று மணி நேரம் இலவச சூரிய மின்சாரம் வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட உள்ளது என்று எரிசக்தி அமைச்சர் கிறிஸ் போவன் இன்று கூறினார்.
கிறிஸ் போவன் மேலும் கூறியதாவது:
ஜூலை 2026 க்குள் சோலார் ஷேரர் திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது, இதன் மூலம் மின்சார சில்லறை விற்பனையாளர்கள் நியூ சவுத் வேல்ஸ், தெற்கு ஆஸ்திரேலியா மற்றும் தென்கிழக்கு குயின்ஸ்லாந்தில் உள்ள வீடுகளுக்கு தினமும் குறைந்தது மூன்று மணிநேரம் இலவச மின்சாரம் வழங்க வேண்டும். இந்தத் திட்டம் அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் உட்பட அனைத்து வீடுகளுக்கும் பொருந்தும்.
பயனாளர்கள், ஒரு ஸ்மார்ட் மீட்டரை வைத்திருக்க வேண்டும் மற்றும் சூரிய மின் உற்பத்தி நேரங்களுக்கு ஆற்றல் பயன்பாட்டை மாற்ற சோலார் ஷேரர் திட்டத்தைத் தேர்வுசெய்ய வேண்டும். இதன்மூலம் பகல் நேரத்தில் பயனர்கள் இலவச சூரிய மின்சாரத்தைப் பெறுவார்கள்.
இவ்வாறு கிறிஸ் போவன் கூறினார்.
கிறிஸ் போவன் இந்த திட்டம் பற்றி கூறியதை அடுத்து,ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய மின்சார சப்ளையர்களாக இருக்கும் நிறுவனங்களான ஏஜிஎல், ஆரிஜின் எனர்ஜி ஆகியவற்றின் பங்கு விலைகள் பிற்பகலில் 3 சதவீதம் சரிந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
நகரங்களில் மக்கள் அனைவரும் அலுவலகம், பள்ளி என அவரவர் வேலைக்கு சென்று விடுவார்கள். பெரும்பாலான வீடுகளில் யாருமே அந்நேரத்தில் இருக்க மாட்டார்கள். இலவச மின்சாரத்தை அப்போது கொடுத்தால்? வீணாக ஏசி அல்லது ஹீட்டிங் உபகரணங்களை ஓட்டாமல் இருந்தால் நல்லது. இன்றைய கால வாஷிங் மெஷின் மற்றும் துணி காயவைக்கும் ட்ரையர்கள், பாத்திரம் துலக்கும் டிஷ் வாஷர் இவைகள் ப்ரொக்ராம் செய்து, நாம் வீட்டை விட்டு சென்றாலும் தாமதமா இயங்கும் delayed start மற்றும் வைஃபை மூலம் இயக்கும் வசதி கொண்டவைகளாக வருகின்றன. அவைகளுடன் நல்ல கொழுத்த பேட்டரியை வாங்கி சார்ஜ் செய்து வைக்கலாம். ஆனால் இந்த கதையில் 3 மணிநேரம் இலவசம் ஆனால் 3 யூனிட்டுக்கு மேலே கிடையாது என்று கட்டையை போட்டு விடுவார்கள். The devil is in the details என்று சொல்வார்கள். முழு சலுகை விவரமும் இல்லாமல் கை தட்ட முடியாது.
காற்று, நீர் இயற்கை வளம். ஆனால் மின்சார உற்பத்தி செலவு செய்து தான் பெற முடியும். மக்களுக்கு இலவசம். அரசுக்கு கடன். என்றாவது ஒரு நாள் மக்களிடம் அரசு வசூலிக்க வேண்டும். உலகம் வாக்கிற்கு தகுதி நிர்ணயம் செய்யாமல், அதிக - குறைந்த வாக்கிற்கு இணைப்பு இல்லாமல் ஒரு ஓட்டு பெற்று ஜெயிக்க முடியும் என்றால் திராவிட மாடல், காங்கிரஸ் இலவச கொள்கை ஆஸ்திரேலியாவிற்கு சரி என்று தோன்றும்.
இது தொலைநோக்கு பார்வை-யுள்ள நாடு... இங்கு வாரத்துக்கு 3மணி நேரம் கரண்ட் கட் ஆகும்...
வரிகள் அதிகம் கட்டியும் அவதிப்படும் நிலைமை இந்தியாவில் அதிகம், எல்லாம் இந்த அதிகார போதைகளும், லஞ்சகளிலும் ஊறிபோயுள்ள அரசு சேவகர்-களுக்கும் சமர்ப்பணம்..., வாழ்க பாரதம், வாழ்க பாரத மணித்திருநாடு
சோலார் பேனல்களின் ஆயுள் முடிந்தவுடன் எப்படி அவற்றை மக்க வைப்பது என்பது இன்னமும் தீர்மானிக்கப்படாமல் இருக்கிறது
டெக்ஸ்சாஸ் மாநிலத்தில் பகலில் அலுவலகங்கள் மற்றும் தொழிற்சாலைகள் இயங்குவதால் இரவில் வீடுகள் இலவசமாக உபயோகிக்கும் திட்டம் இருந்தது . பகலில் வீடுகளில் வாஷிங் மெஷின் போன்ற உபகரணங்களை உபயோகிக்காமல் இருந்தார்கள்...இப்போது தெரியவில்லை
ஆஸ்திரேலியா காரங்க எப்படியோ தெரியாது. நாங்ஙன்னா அந்த மூணு மணி நேரத்தில் மிக்ஸியில், கிரைண்டர், வாஷிங் மச்சினிங், டிஷ்வாஷர், எல்லாம் சார்ஜிங். வாக்கும் கிளீனர் எல்லாத்தையும் போட்டு வீட்டு வேலையை முடித்து கொள்வோம். நாங்கன்னா சும்மாவா ?
ட்ராவிடிய மாடல்
Our politicians wont think like this. Economic development means transferring benefits to our country people, not for the world.
ஐயோ அங்கேயுமா......