35 மீனவர்களுக்கு நவ.17 வரை காவல்
ராமேஸ்வரம்: எல்லை தாண்டியதாக இலங்கை கடற்படையினர் கைது செய்த நாகபட்டினம், ராமநாதபுரம் மீனவர்கள் 35 பேரை நவ., 17 வரை சிறையில் அடைக்க ஊர்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டது.
நவ.,2ல் நாகபட்டினம், ராமநாதபுரம் மாவட்டம் நம்புதாளை கடற்கரையில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களில் 35 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்து யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரியிடம் ஒப்படைத்தனர். மீனவர்கள் மீது எல்லை தாண்டியதாக வழக்கு பதிவு செய்து ஊர்காவல் துறை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். நவ.,17 வரை மீனவர்களை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து மீனவர்களை போலீசார் பாதுகாப்புடன் அழைத்துச்சென்று சிறையில் அடைத்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பதவி விலக தயாராக உள்ளேன் அமைச்சர் முன் மா.செ., குமுறல்
-
தி.மு.க.,வில் மனோஜ் பாண்டியன் ஐக்கியம் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்தார்
-
தி.மு.க எம்.எல்.ஏ., மருத்துவமனையை காப்பாற்ற சூழ்ச்சி: பழனிசாமி
-
35வது நாளாக காசில்லை; பணமில்லை 'சாதனை படைக்கிறார்' அமெரிக்க அதிபர்
-
விவசாயிகள் வயிற்றில் அடிக்கலாமா?
-
பட்டீஸ்வரம் கோவிலில் பணிபுரிய ஈ.வெ.ரா., பற்றி தெரிய வேண்டுமாம்; அறநிலையத்துறையின் உச்சகட்ட அபத்தம்
Advertisement
Advertisement