பாக்ஜலசந்தி கடல் பகுதியில் நாகை காரைக்கால் மீனவர்கள் அத்துமீறல்

ராமேஸ்வரம்: பாக்ஜலசந்தி கடலில் அத்துமீறி நாகபட்டினம், காரைக்கால் மீனவர்கள் மீன் பிடிப்பதால் பாதிப்பு ஏற்படுவதாக ராமேஸ்வரம் மீனவர்கள் தெரிவித்தனர்.

நேற்று ராமேஸ்வரத்தில் மீனவர் சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தலைவர் சேசு தலைமையில் நடந்தது.

இதில் இன்று (நவ.,5) மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் மீன்துறை வழங்கும் அனுமதி டோக்கனை பெற்றுக் கொண்டு மீன்பிடிக்க செல்ல வேண்டும்.

டோக்கன் வாங்காமல் சென்றால் அந்த படகிற்கு 2 வாரம் அனுமதி சீட்டு வழங்காமல், மானிய டீசலை ரத்து செய்து படகை கரையில் நிறுத்தி வைக்க மீன்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் நாகபட்டினம், காரைக்கால் மீனவர்கள் அத்துமீறி பாக்ஜலசந்தி கடலில் மீன்பிடிப்பதால் ராமேஸ்வரம் பகுதி மீனவர்களுக்கு மீன்கள் கிடைக்காமலும், இலங்கை கடற்படை தாக்குதலுக்கு ஆளாகவும் நேரிடுகிறது.

எனவே அத்து மீறும் நாகபட்டினம், காரைக்கால் மீனவர்களை மத்திய, மாநில அரசுகள் தடுத்து நிறுத்த வேண்டும் என தீர்மானங்களை நிறைவேற்றினர்.

Advertisement