'மினி கன்ட்ரிமேன் ஜே.சி.டபுள்யூ., ஆல்4' பெட்ரோல் மாடலில் முதல் முறையாக அறிமுகம்

'பி.எம்.டபுள்யூ.,' குழுமம், 'மினி கன்ட்ரிமேன் ஜே.சி.டபுள்யூ., ஆல்4' என்ற கிராசோவர் எஸ்.யூ.வி., காரை அறிமுகம் செய்துள்ளது. முதல் முறையாக பெட்ரோல் மாடலில் வந்துள்ள இந்த கார், இங்கு இறக்குமதி முறையில் விற்பனையாகிறது.


இதில், 2 லிட்டர், 4 - சிலிண்டர், டர்போ பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின், 7 - ஸ்பீடு 'டி.சி.டி.,' ஆட்டோ கியர்பாக்ஸ் மற்றும் 'ஆல் வீல்' டிரைவ் அமைப்புகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. 100 கி.மீ., வேகத்தை வெறும் 5.4 வினாடியில் எட்டிப் பிடிக்கிறது. டாப் ஸ்பீடு 250 கி.மீ.,ராகவும், மைலேஜ் 15.4 கி.மீ.,ரும் வழங்குகிறது.
Latest Tamil News

'ஜே.சி.டபுள்யூ.,' என்பது அதிகவேக மினி கார்களுக்கு வழங்கப்படும் அடையாளம் ஆகும். அதற்கேற்ற வகையில், கார் ரேஸ் பந்தய கொடி வடிவத்தில் முன்புற கிரில், சீரமைக்கப்பட்ட பம்பர்கள், காரின் வெளிப்புறம் எங்கும் சிவப்பு நிற அலங்காரங்கள், 'ஜே.சி.டபுள்யூ.,' பெயர் அடையாளம், 19 அங்குல அலாய் சக்கரங்கள் வழங்கப்படுகின்றன.


உட்புறத்தில், 9.4 அங்குல 'ஒ - எல்.இ.டி.,' டச் ஸ்கிரீன், ஹார்மன் கார்டன் சவுண்ட் சிஸ்டம், பேனரோமிக் கிளாஸ் ரூப், ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, ஒயர்லெஸ் சார்ஜர், ஆட்டோ பார்க் அசிஸ்ட், 360 டிகிரி கேமரா, 6 காற்று பைகள், அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் உள்ளிட்டவை வந்துள்ளன. இந்த கார் மூன்று நிறங்களில் கிடைக்கிறது.

Advertisement