நேபாளம் 2 இடங்களில் திடீர் பனிச்சரிவு 7 மலையேற்ற வீரர்கள் பலி

3

காத்மாண்டு: நம் அண்டை நாடான நேபாளத்தில், இரண்டு இடங்களில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி ஏழு மலையேற்ற வீரர்கள் உட்பட ஒன்பது பேர் உயிரிழந்தனர்.

நேபாளத்திற்கு, மலையேற்ற சாகசத்திற்காக வெளிநாடுகளைச் சேர்ந்த ஏராளமானோர் வருவது வழக்கம். அதன்படி, டோலாகா மாவட்டத்தில் உள்ள யாலுங்ரி மலை சிகரத்திற்கு ஒரு மலையேற்றக்குழு ஏறியது.

கடல் மட்டத்தில் இருந்து, 16 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள அந்த சிகரத்தில் அமைக்கப்பட்டிருந்த முகாமில் மலையேற்ற வீரர்கள் தங்கி இருந்தனர். அப்போது திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் இத்தாலி, கனடா, பிரான்ஸ், ஜெர்மன் நாடுகளைச் சேர்ந்த மலையேற்ற வீரர்களும், நேபாளத்தைச் சேர்ந்த இரண்டு வழிகாட்டிகளும் புதையுண்டனர்.


இதில், 5 பேர் மீட்கப்பட்டு காத்மாண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதற்கிடையே, மேற்கு நேபாளத்தில் உள்ள பன்பாரி மலையில், கடந்தவாரம் கனமழையின்போது காணாமல் போன இரண்டு இத்தாலிய மலையேற்ற வீரர்கள், கூடாரத்தில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டனர்.

Advertisement