பிரதமர் கிசான் சம்மான் நிதி திட்டம் விவசாயிகள் அடையாள எண் பெற அறிவுறுத்தல்
கடலுார்: பிரதமர் கிசான் சம் மான் நிதி திட்டத்திற்கு, விவசாயிகள் தனித்துவ அடையாள எண் பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடலுார் மாவட்டத்தில் பிரதமர் கிசான் சம்மான் நிதி திட்டம் கடந்த, 2019ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் மூலம் நான்கு மாதத்திற்கு ஒருமுறை தலா 2000 ரூபாய் வீதம் ஆண்டிற்கு 6,000 ரூபாய் மூன்று தவணைகளில், சொந்தமாக விவசாய நிலம் வைத்துள்ள குடும்பங்களுக்கு உதவித் தொகையாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடிப் பணப்பரிமாற்றம் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பயனாளிகள் வரும் காலங்களில் தவணை தொகை பெற தனித்துவ விவசாய அடையாள எண் அவசியம் என உறுதியாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலுார் மாவட்ட விவசாயிகள் தங்கள் பகுதி வேளாண் மற்றும் தோட்டக்கலை அலுவலர்களை தொடர்பு கொண்டோ அல்லது பொது சேவை மையத்தின் மூலமாகவோ தங்களது ஆதார் எண், சிட்டா, ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணுடன் சென்று உடனடியாக பதிவு செய்து தனித்துவ விவசாய அடையாள எண் பெறலாம்.
இதுநாள் வரை தனித்துவ விவசாய அடையாள எண் பெறாத பயனாளிகள் தங்கள் வட்டார வேளாண் மற்றும் தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை தொடர்புகொண்டு தனித்துவ அடையாள எண்ணுக்கு பதிவு செய்ய வேண்டும் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
மேலும்
-
நியூயார்க் நகர மேயர் தேர்தலில் வெற்றி பெற்றார் வம்சாவளி இந்தியர் ஜோஹ்ரான் மம்தானி
-
நாசாவை வழிநடத்த எலான் மஸ்க் நண்பர் நியமனம்; அதிபர் டிரம்ப் அறிவிப்பு
-
வேட்பாளர் வாய்ப்புக்கு 'பென் டீமிடம்' 'இன்புளுயன்ஸ்' செய்யும் தி.மு.க.,வினர்; 'போட்டுக்கொடுக்கும்' அரசியலும் ஜரூர்
-
ட்ரையம்ப் 'ஸ்பீடு ட்ரிபிள் 1200 ஆர்.எக்ஸ்.,' 3.2 வினாடியில், 100 கி.மீ., வேகம்
-
'மினி கன்ட்ரிமேன் ஜே.சி.டபுள்யூ., ஆல்4' பெட்ரோல் மாடலில் முதல் முறையாக அறிமுகம்
-
டாடாவின் 'ஏசி' சொகுசு பஸ்