அமெரிக்க பொருட்கள் மீதான 24% வரிவிதிப்பு நிறுத்தம்: சீனா அறிவிப்பு
பீஜிங்: அமெரிக்க பொருட்களுக்கான 24 சதவீத வரியை ஒரு ஆண்டுக்கு தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக சீனா அறிவித்துள்ளது.
ஆசிய - பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு கூட்டமைப்பின் இரண்டு நாள் உச்சி மாநாடு, கிழக்காசிய நாடான தென் கொரியாவில் உள்ள கியோங்ஜு நகரில் நடந்தது. இம்மாநாட்டில் பங்கேற்பதற்காக தென் கொரியா சென்ற அமெரிக்க அதிபர் டிரம்ப், சீன அதிபர் ஷீ ஜின்பிங்கை சந்தித்து, இருதரப்பு உறவுகள் குறித்து பேசியிருந்தார்.
அமெரிக்காவுக்கு அரிய வகை கனிமங்கள் ஏற்றுமதிக்கான தடைக்கு ஓராண்டு விலக்கு, அமெரிக்க வேளாண் பொருட்கள் கொள்முதல் உள்ளிட்டவை குறித்து சீனா சம்மதம் தெரிவித்ததாக தெரிவிக்கப்பட்டது. இதற்கு பிரதிபலனாக சீன பொருட்கள் மீது அமெரிக்கா விதித்த ஒட்டுமொத்த வரியில், 10 சதவீதத்தை குறைத்தார் டிரம்ப்.
தற்போது அமெரிக்க பொருட்களுக்கான 24 சதவீத வரியை ஒரு ஆண்டுக்கு தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக சீனா அறிவித்துள்ளது. அதே நேரத்தில் அமெரிக்க பொருட்கள் மீது ஏற்கனவே விதிக்கப்பட்டு வந்த 10 சதவீத வரி தொடரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
உலகின் இரண்டு பெரிய பொருளாதார நாடுகளுக்கு இடையிலான வர்த்தக பதட்டங்களை தணிக்க, சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இடையே கடந்த வாரம் நடந்த சந்திப்பிற்குப் பிறகு இந்த நடவடிக்கை வந்துள்ளது.
சீனா அமெரிக்கா வர்த்தக போர் கணவன் மனைவி சண்டை போல் இருக்கிறது.. சண்டை போடுவதும் சமாதானம் ஆவதுமாக இருக்கிறார்கள்மேலும்
-
சாலை விபத்தை தடுக்க சிறப்பு இயக்கம்: ராஜஸ்தான் அரசு இலக்கு
-
அனில் அம்பானிக்கு அடுத்த சிக்கல்: மத்திய அரசும் விசாரணையை துவக்கியது
-
உலகக்கோப்பையுடன் பிரதமரை சந்தித்த இந்திய மகளிர் கிரிக்கெட் அணியினர்!
-
வந்தே மாதரம் 150வது ஆண்டு நிறைவு: கொண்டாட மஹாராஷ்டிராவில் சிறப்பு ஏற்பாடு
-
மூளையை தின்னும் அமீபா தொற்றுக்கு 4 பேர் பலி: கேரளாவில் அதிகரிக்கும் அச்சம்
-
அதிகரிக்கும் கூட்டநெரிசல் : டில்லியில் நான்கு ரயில் நிலையங்களில் பிளாட்பாரம் டிக்கெட் விற்பனை நிறுத்தம்