கூட்டணி பற்றி முடிவு எடுக்க விஜய்க்கு அதிகாரம்: தவெக சிறப்பு பொதுக்குழுவில் தீர்மானம்
சென்னை: தமிழக முதல்வர் வேட்பாளர் விஜய் தலைமையில் தேர்தலை சந்திப்போம் என்றும், கூட்டணி குறித்து முடிவு எடுக்க விஜய்க்கு முழு அதிகாரம் அளித்தும், தவெக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த சூழலில், மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதியில், இன்று (நவ.,05) காலை த.வெ.க., சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கரூர் சம்பவம் நடந்து 38 நாட்களுக்கு பின், கட்சி நிர்வாகிகளுடன், பொதுக்குழு கூட்டத்தில் விஜய் பங்கேற்றார்.
இக்கூட்டத்தில் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் என, 1,400க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.
இரங்கல் தீர்மானம்
கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து, தவெக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
மேலும் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் என்னென்ன?
* தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 35 மீனவர்கள் கைதுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றம்.
* பெண்கள் பாதுகாப்பு, விளம்பர மாடல் திமுக ஆட்சியில் தமிழகமே தலைகுனிந்து நிற்கிறது என்பதை கூறுவதோடு, சட்டம், ஒழுங்கு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யாத திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றம்.
* வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளை நிறுத்த கோரி தீர்மானம் நிறைவேற்றம்.
*பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் கட்டுமானம் பணிகளை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றம்.
* மக்கள் சந்திப்பு மற்றும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் கட்சி தலைவர் விஜய், அவரை காண வரும் மக்களுக்கு பாரபட்சம் இல்லாமல் தமிழக அரசு முழுமையான பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றம்.
* டெல்டா மாவட்ட விவசாயிகளின் பாதிப்புக்கு காரணமான தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றம்.
* வடகிழக்கு பருவமழைக்கு போதிய ஏற்பாடுகளை அரசு செய்து முடிக்க வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றம்.
* தமிழக தொழில்துறைக்கு வந்த முதலீடுகள் குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றம்.
* ஜனநாயகத்துக்கு எதிராக கருத்துரிமையையும் பேச்சுரிமையையும் சிதைக்கும் வகையில் கைது நடவடிக்கை எடுக்கும் திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றம்.
* தமிழக முதல்வர் வேட்பாளர் விஜய் தலைமையில் தேர்தலை சந்திப்போம். கூட்டணி குறித்து முடிவு எடுக்க விஜய்க்கு முழு அதிகாரம் அளித்து தீர்மானம் நிறைவேற்றம்.
* கட்சியின் மீதும், நிர்வாகிகள் மீதும் அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் அவதூறுகளைப் பரப்பும் ஆளுங்கட்சியின் கைக்கூலிகளாகச் செயல்படுபவர்களுக்குக் கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
போட்டியே பிஜேபி மற்றும் திமுக தலைமையிலான இரு வலுவான யானைகளுக்குமான போட்டி. இடையே புகும் முயல்குட்டிகள் மிதிபட்டு சாகும். இதை உணர்ந்து ஏற்கனவே எடப்பாடி புத்திசாலித்தனமாக பிஜேபி தலைமையிலான கூட்டணியை தேர்ந்தெடுத்துவிட்டார். விரைவில் எடப்பாடி போன்று விஜய்யும் பிஜேபி தலைமையிலான கூட்டணிக்கு வருவார்.
அவர் தானே கட்சியை ஆரம்பித்தார் அவர் தானே அதன் தலைவன் பின் அவர் தான் முடிவு எடுக்க வேண்டும்.
அப்போ சங்கீதாவுக்கு அதிகாரம் இல்லை
குறைந்தது நான்கு முனை போட்டி .முடிவு வாக்காளர்கள் போடும் ஓட்டில்
இரு முனைக்கு மேல் போய்விட்டாலே,
ADVANTAGE DMK.
யாருமே இல்லாத டி கடைக்கு எதுக்கு இப்படி டீ ஆத்திரார்
பாவமா இருக்கு....எப்படி கதறுகிறது உளறுகிறது ....பாக்கவே பாவமா இருக்கு
விஜய் ஜோசப் அரசியல் கட்சியில் பணியாற்றி தலைவராக வரவில்லை. எம் ஜி ராமச்சந்திரன் ஜெயலலிதா எஸ் எஸ் ராஜேந்திரன் போன்றோர் கட்சிக்கு பாடுபட்டு வந்தவர்கள் குறிப்பிட்ட நேரத்தில் கூட்டத்திற்கு வருவதில்லை. பாதுகாப்பான வழிப்பயணத்திற்கு ஏற்பாடு செய்வதில்லை. தி மு க எ.தி மு க கட்சிகளில் தொண்டர்கள் அதிகம் கூட்டம் நல்லபடிஅமைதியாய் நடக்க உதவுவார்கள் இந்த கட்டுப்பாடான நிலைக்கு தவே க கட்சி தலைமை இல்லை.
விஜய் டெபாசிட் வாங்குவாரா இல்லை சீமானை விட அதிகம் வாங்குவாரா , கானல் நீர் தான் விஜய் நிலை
யார் எப்படி சேர்ந்தாலும் வெற்றி DMK தான்
பகல் கனவு கள்ள ஓட்டும் போடமுடியாது
அய்யோ பாவம் தமிழக மக்கள் படித்தவருக்கு ஓட்டு போடமாட்டார்கள் நோட்டு கொடுத்தவருக்கு ஓட்டு போட்டார்கள், இப்ப நடித்துவரும் வருகிறார்.
தமிழக மக்களை ஏமாளி என்று நினைத்தாயா விஜய். ஆளத் தெரியாதவன் முதல்வரா. ஏற்கனவே ஒருவரை தேர்ந்தெடுத்து பட்டது போதாதா. ஒரு குச்சி முட்டாய் வாங்கி ஓரமா நின்று வேடிக்கை பாரு. எச்சில் கையால் காக்கை ஓட்டாதவனெல்லாம்......மேலும்
-
சாலை விபத்தை தடுக்க சிறப்பு இயக்கம்: ராஜஸ்தான் அரசு இலக்கு
-
அனில் அம்பானிக்கு அடுத்த சிக்கல்: மத்திய அரசும் விசாரணையை துவக்கியது
-
உலகக்கோப்பையுடன் பிரதமரை சந்தித்த இந்திய மகளிர் கிரிக்கெட் அணியினர்!
-
வந்தே மாதரம் 150வது ஆண்டு நிறைவு: கொண்டாட மஹாராஷ்டிராவில் சிறப்பு ஏற்பாடு
-
மூளையை தின்னும் அமீபா தொற்றுக்கு 4 பேர் பலி: கேரளாவில் அதிகரிக்கும் அச்சம்
-
அதிகரிக்கும் கூட்டநெரிசல் : டில்லியில் நான்கு ரயில் நிலையங்களில் பிளாட்பாரம் டிக்கெட் விற்பனை நிறுத்தம்