அமெரிக்காவில் வெடித்து சிதறிய சரக்கு விமானம்: 7 பேர் பலி; 11 பேர் காயம்

2


வாஷிங்டன்: அமெரிக்காவில் சரக்கு விமானம் வெடித்து சிதறியதில், 7 பேர் உயிரிழந்தனர். மேலும் 11 பேர் பலத்த காயம் அடைந்தனர்.


அமெரிக்காவின் லூயிஸ்வில் விமான நிலையத்திலிருந்து சரக்கு விமானம் ஒன்று புறப்பட்டது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் கட்டுப்பாட்டை இழந்தது. பின்னர் விமானம் விழுந்து நொறுங்கி தீப்பற்றிக்கொண்டது. இதனால் தீம்பிழம்புகள் உருவாகி பெரும் புகை மண்டலமே உருவானது.

சம்பவ இடத்திற்கு விரைந்த நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். ஆயிரம் கிலோ எடை கொண்ட எரிபொருளுடன் விமானம் வெடித்துச் சிதறியதே பெரிய அளவுக்கான தீ விபத்துக்கு காரணம் என தகவல் தெரிவிக்கின்றன.



இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 11 பேர் காயம் அடைந்துள்ளனர் என கவர்னர் ஆண்டி பெஷியர் தெரிவித்து உள்ளார். விபத்தில் சிக்கிய இந்த விமானம், 34 ஆண்டுகள் பழமையானதாகும்.


இந்த விமானம் 2006 முதல் சேவையில் இருந்துள்ளது. இந்த விபத்து குறித்து தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் விசாரணை நடத்தி வருகிறது. விமானம் கீழே விழுந்து நொறுங்கி பற்றி எரியும் போது எடுக்கப்பட்ட வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement