ஹரியானாவில் 25 லட்சம் ஓட்டுக்கள் திருட்டு: ராகுல் குற்றச்சாட்டு
புதுடில்லி: ஹரியானாவில் 25 லட்சம் ஓட்டுக்கள் திருடப்பட்டதாகவும், மொத்தம் உள்ள ஓட்டுகளில் 8ல் ஒன்று போலியானது என்றும் லோக்சபா எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்பியுமான ராகுல் குற்றம் சாட்டியுள்ளார்.
பீஹார் சட்டசபை தேர்தலில் முதல் கட்ட ஓட்டுப்பதிவுக்கான பிரசாரம் ஓய்ந்திருக்கும் நிலையில், நாளை ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. இந்நிலையில் வாக்குத்திருட்டு பற்றி இன்று (நவ.,05) ராகுல் நிருபர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: ஹரியானாவில் 25 லட்சம் ஓட்டுக்கள் திருடப்பட்டு இருக்கிறது. மொத்தம் உள்ள ஓட்டுகளில் 8ல் ஒன்று போலியானது. 5 லட்சத்து 21 ஆயிரத்து 619 ஓட்டுக்கள் போலி வாக்காளர்கள். 93 ஆயிரத்து 174 ஓட்டுக்கள் போலியான முகவரியை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.
பல்க் வாக்காளர்கள் (ஒரே முகவரியில் பல வாக்காளர்கள்) 19 லட்சம் பேர் உள்ளனர். ஓட்டுப்பதிவுக்குப் பிறகான தேர்தல் கருத்துக்கணிப்புகள், ஹரியானா மாநிலத்தில் காங்கிரஸ் தான் ஆட்சி அமைக்கும் என கூறியிருந்தது. ஆனால் தேர்தல் முடிவுகள் மாறி வந்தது.
மிகப்பெரிய சதி
ஓட்டு எண்ணிக்கைக்கு 2 தினங்களுக்கு முன்பாக, முதல்வர் வேட்பாளராக இருந்த நயாப் சிங் சைனி பாஜ கண்டிப்பாக ஹரியானாவில் ஆட்சியைப் பிடிக்கும், அதற்கான வேலைகளை செய்து விட்டோம் என சிரித்தபடியே கூறுகிறார். அந்த சிரிப்பின் பின்னால் மிகப்பெரிய சதி இருக்கிறது.
நாட்டின் இளைஞர்கள் நான் சொல்வதை கவனமாக கேளுங்கள். ஏனென்றால் உங்களது எதிர்காலத்தை பற்றி தான் நான் தற்பொழுது பேசுகிறேன். உங்களது வாக்குரிமையை நிலைநாட்டுவதற்காக தான் பேசுகிறேன்.
பிரேசில் மாடல் அழகி
பிரேசில் நாட்டைச் சேர்ந்த மாடல் அழகி ஒருவர் இந்தியாவின் ஹரியானா மாநில தேர்தலில் ஓட்டு செலுத்தி இருக்கிறார். பிரேசில் நாட்டை சேர்ந்த பெண் பெயர் ஹரியானா மாநில வேட்பாளர் பட்டியலில் சேர்த்தது எப்படி? இவ்வாறு ராகுல் பேசினார்.
சிசிடிவி காட்சிகள்
மேலும் ராகுல் கூறியதாவது: பெண்மணி ஒருவர் இரண்டு வாக்குப்பதிவு மையங்களில் 223 முறை தனித்தனியாக வாக்காளர் பட்டியலில் இடம் பெற்று இருக்கிறார். இந்த பெண் நினைத்து இருந்தால் எத்தனை முறை வேண்டுமானாலும் ஓட்டளித்து இருக்க முடியும். இதனால் வாக்குச்சாவடிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை தேர்தல் கமிஷன் வெளியிடாமல் வைத்து இருக்கிறது. ஆயிரக்கணக்கான வாக்குச்சாவடிகளில் லட்சக்கணக்கான போலி ஓட்டுக்கள் பதிவாகி உள்ளது.
ஒரே நபர் 14 முறை!
சஷா கிரி என்பவர் பதாஸ் பூர் என்ற இடத்தில் 14 முறை ஓட்டளித்து இருக்கிறார். ருத்ர அபிஷேக், நமன் ஜெயின் என்ற நபர்கள் இதே இடத்தில் 18 ஓட்டுக்களை செலுத்தி இருக்கிறார்கள். பாஜவின் ஆயிரக்கணக்கான நிர்வாகிகள், தலைவர்கள் ஹரியானாவிலும் ஓட்டு அளித்து இருக்கின்றனர். உத்தர பிரதேசத்திலும் ஓட்டளித்து இருக்கிறார்கள்.
3.5 லட்சம் ஓட்டுக்கள்
பாஜ நிர்வாகியான உத்தர பிரதேசத்தை சேர்ந்த பிரகலாத் என்பவர் மதுரா தொகுதியில் முதலில் ஓட்டளித்து இருக்கிறார். பிறகு ஹரியானாவின் நோத்தல் சட்டசபை தொகுதியிலும் ஓட்டளித்து இருக்கிறார். ஹரியானாவில் சட்டசபை தேர்தலுக்கு முன்பாக 3.5 லட்சம் ஓட்டுக்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறது. இவர்கள் அனைவரும் முந்தைய லோக்சபா தேர்தலில் ஓட்டளித்தவர்கள். ஆனால் பாஜ தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, இத்தனை பேரையும் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கி இருக்கிறார்கள்.
ஒரே வீட்டில் 501 ஓட்டுக்கள்
ஹரியானாவின் ஹோடல் தொகுதியில் ஒரே வீட்டில் 501 வாக்காளர்கள் வசிப்பதாக கூறி மாபெரும் மோசடி செய்து உள்ளனர். ராய் தொகுதியில் ஒரே வீட்டில் 108 வாக்காளர்கள், பாஜ நிர்வாகி வீட்டில் 66 ஓட்டுக்கள் உள்ளதாக மோசடி நடந்துள்ளது. ஒரு பெண்ணின் புகைப்படத்தை வைத்து ஒரு தொகுதியில் 100 ஓட்டுக்கள் திருடப்பட்டு உள்ளது. ஹரியானா தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாலேயே காங்கிரஸ் வெற்றி பெற முடியவில்லை. இவ்வாறு ராகுல் கூறியுள்ளார்.
வாக்காளர் பட்டியலில் இருந்தவர்கள் அத்தனை பேரும் வோட்டு போட்டதாக சரித்திரம் இல்லை.
கையில் மை எதற்கு வைக்கிற்ர்கள் இனி தேவை இல்லை.
ஒருவர் ஒரே நாளில் பல வாக்கு சாவடியில் எப்படி போட முடியும்
போட்டோவுடன் முகம் பார்த்துதான் வோட்டு போட அனுமதி வழங்குகிறார்கள் அங்கு உள்ள மற்ற கட்சி பூத்து ஏஜெண்டுகள் என்ன செய்தார்கள்.
ராகுல் சொல்வதெல்லாம் உண்மை உண்மையைத்தவிர வேறெதுவும் இல்லை???எப்படி???இதை செய்தது காங்கிரஸ் ஆகவே தான் அவருக்கு இந்த 25 லட்சம் ஓட்டுக்கள் திருட்டு என்று மிக மிக சரியாகத்தெரிவதனால் சொல்கின்றார். ஆகவே ராகுல் சொல்வது உண்மை.
Why not file a case by Leader of Opposition, by drum beating the image of country will be spoiled. Either the Election Commission or by Supreme Court can take suo moto action against him to prove the claim. When there will be party booth agent how he has allowed in case of fraud vote etc. Certainly the country is going to suffer because of false claims if not proved.
இவருக்கு மாங்கு மாங்கு என இவ்விடம் ஒருவர் ஊளையிட்டுக்கொண்டிருப்பது ஏனோ?
இவரிடம் அந்த ஒரே ஒரு டீசர்ட் தானா உள்ளது. எவ்வளவு காலத்துக்கு அதையே போட்டுக் கொண்டிருப்பார்
வாக்காளர் அடையாளம் மாநில நிர்வாகம். வரைவு பட்டியல், இறுதி பட்டியல் வெளியீடு. அப்போது கண்காணிக்க முடியும். தேர்தல் மாநில அரசு ஊழியர்கள், அனைத்து கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில். ஓட்டு பெட்டி பாதுகாக்க அனைத்து கட்சிக்கும் உரிமை. எல்லா கட்சியும் வென்று வருகின்றன. எண்ணிக்கை தான் மாறுபடுகிறது. தொகுதிக்கு காங்கிரஸ் பத்து கள்ள ஓட்டு நபரை பிடித்து வழக்கு தொடர முடியும். காதல், காங்கிரஸ் திருடர்கள் பயப்பட மாட்டார்கள். அந்த கள்வருக்கு சட்டம் இல்லை?
He is supposed to be in Tihar Jail . NDA Should not allow him to roam around freely
தேர்தல் முறைகேட்டில் எம்பி பதவியிழந்த ஒரே பிரதமர் உங்க பாட்டி இந்திராதான். மோசடிகள் எல்லாவற்றிலும் முன்னோடி உங்க குடும்பம்தான்.
இவ்வளவெல்லாம் செய்யத் தெரிந்த பிஜெபியால் ஏன் பாதிக்கும் மேற்பட்ட மாநிலங்களில் சொந்த மெஜாரிட்டியுடன் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை? பார்லிமென்ட் தேர்தலிலும் பாதியிடங்கள் கூட பெற முடியவில்லை? ஜனசங் காலத்திலிருந்தே பலமாக இருக்கும் ஹிமாச்சல பிரதேச சட்டசபைத் தேர்தலில் ஜெயிக்க முடியவில்லை? ஆக ராகுல் ஏக்கர் கணக்கில் ரீல் விடுகிறார்.
இவர் வெளி நாடுகளில் சுற்றி திரிவது இவருக்கும் நல்லது காங்கிரஸ் கட்சிக்கும் நல்லதுமேலும்
-
14 இந்தியர்களை திருப்பி அனுப்பிய பாக்.,: ஹிந்துக்கள் என காரணம் சொல்கிறது
-
ஹரியானாவில் யாரும் மேல்முறையீடு செய்யவில்லை: ராகுலின் குற்றச்சாட்டை நிராகரித்தது தேர்தல் கமிஷன்
-
கட்டணம் செலுத்தாமல் விமான டிக்கெட்டுகள் ரத்து: புதிய விதிகள் விதித்தது சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம்
-
போஸ்னியாவில் சோகம்: முதியோர் இல்லம் தீப்பிடித்ததில் 11 பேர் பலி
-
உத்தரபிரதேசத்தில் தண்டவாளத்தை கடக்கும் போது விபரீதம்; ரயில் மோதி ஆறு பேர் பலியான சோகம்!
-
ரூ.5.76 லட்சம் மதிப்புள்ள மதுபான பாட்டில்கள் பறிமுதல்: தெலுங்கானாவில் அதிகாரிகள் நடவடிக்கை