செய்திகள் சில வரிகளில்

சி.பி.எஸ்.இ., இணைப்பு பள்ளிகளில் படித்து, வேறு பள்ளிகளுக்கு மாறுவோருக்கான மாற்றுச் சான்றிதழில், தலைமை அலுவலகத்தில், 'கவுன்டர் சைன்' எனும் எதிர் கையொப்பம் பெறும் நடைமுறை இருந்தது.

தற்போது அந்த நடைமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. இனி, அதற்காக விண்ணப்பித்து, 'கால விரயம் செய்ய வேண்டாம்' என, இணைப்பு பள்ளிகளுக்கு, சி.பி.எஸ்.இ., நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

Advertisement