பா.ம.க., கூட்டத்தில் அ.ம.மு.க., நிர்வாகி

தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லுார் அடுத்த கே.ஈச்சம்பாடி தடுப்பணை நீரேற்றும் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி, நேற்று கே.ஈச்சம்பாடி தடுப்பணை பகுதியில், பா.ம.க., கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது.

நேற்றிரவு, அரூர் கச்சேரிமேட்டில், பா.ம.க.,வின் பொதுக்கூட்டம் நடந்தது. பா.ம.க., தலைவர் அன்புமணி கலந்து கொண்ட இந்த இரண்டு நிகழ்ச்சியிலும், அரூர் முன்னாள் எம்.எல்.ஏ.,வும், அ.ம.மு.க., ஆட்சி மன்ற குழு தலைவருமான முருகன் பங்கேற்று பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement