நுாறு ஆண்டுகளைத் தொட்ட ராக்கெட்ஸ் நடனகுழு


கனவுகளின் நகரம் எனச் சொல்லப்படும் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பிரம்மாண்டமான ரேடியோ சிட்டி மியூசிக் ஹால் அமைந்துள்ளது. இதன் அடையாளம் என்னவென்றால் — இங்கு நடைபெறும் புகழ்பெற்ற ரேடியோ சிட்டி ராக்கெட்ஸ் குழுவின் நடனம்தான்.
Latest Tamil News
இது ஒரு வித்தியாசமான நடன நிகழ்வாகும் ஒரே மாதிரியான உயரம் கொண்ட 36 பேர் ஒவ்வொரு நிகழ்விலும் பங்கேற்று ஓரே நேர்கோட்டில் நின்றபடி ஒரே மாதிரியாக இசைக்கு ஏற்ப கால்களை அசைத்தும் உயர்த்தியும் ஆடும் நடனம்தான்.அவர்களின் அந்த ஓழுங்கு,அழகு,நேர்த்தி,அமைப்பு.ஒற்றுமை பார்வையாளர்களுக்கு பரவசத்தை கடத்தும் சக்தி கொண்டது.
Latest Tamil News
நுாறு ஆண்டுகளாக நடைபெறும் இந்த நடன குழுவில் இடம் பெறுபவர்களும்,அவர்களது உடைகளும் மட்டும்தான் அவ்வப்போது மாறுமே தவிர அந்த நடனத்தில் எவ்வித மாற்றமும் இருக்காது.
Latest Tamil News
1925 ஆம் ரஸ்ஸல் மார்கரீட் என்பவர் மிசௌரி மாநிலத்தில் தொடங்கினார். அவரின் கனவு — ஒரே நேரத்தில், ஒரே அளவில், ஒரே அழகில் நடனமாடும் பெண்கள் குழுவை உருவாக்குவது.அவர் கனவு நடனம் அரங்கேறியதும் பார்வையாளர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு.
Latest Tamil News
1932-ல் ராக்கெட்ஸ் குழு நியூயார்க் நகரத்துக்குக் வந்தனர் அப்போது முதல் அவர்கள் ரேடியோ சிட்டி மியூசிக் ஹாலின் நிரந்தர நடனக்குழுவாகத் இப்போது வரை திகழ்ந்து வருகிறார்கள்.

இந்தக்குழுவில் நடனமாடுபவர்கள் மொத்தம் 80 பேர் அத்தனை பேரும் பெண்கள்தான் மொத்த நடன நிகழ்வு 90 நிமிடம் நடைபெறும் 90 நிமிட நிகழ்வு ஒன்பது பகுதிகளாக பிரிக்கப்படும் ஒவ்வொரு பிரிவு நிகழ்விலும் 36 பேர் பங்குபெறுபவர்.ஒவ்வொரு வருடமும் ஆடை வடிவமைப்பில் மாற்றம் இருக்கும் இவர்களுக்கான ஆடைகளை வடிவமைப்பதற்காகவே தேர்ந்த தையற்கலைஞர்கள் குழு உள்ளது.

இந்த நடன குழுவில் இடம் பெற நிறைய பெண்கள் ஆர்வமாக வருவர் ஆனால் அவர்களுக்கு பாலே,டேப்,ஜாஸ் போன்ற நடனங்களில் சிறந்த திறமை இருக்கவேண்டும் அப்படி இருந்தாலும் ஆயிரம் பேரில் ஒரு சில பேர்தான் வருடத்திற்கு ஒரு முறை இடத்தை நிரப்பும் வகையில் தேர்வு செய்யப்படுவர்.

இந்த நடன குழு உலகம் முழுவதும் பயணப்பட்டாலும் கிறிஸ்துமஸ் வந்துவிட்டால் அந்த மாதம் முழுவதும் ரேடியோ சிட்டி ஹாலில்தான் நிகழ்வு நடத்துவர் இவர்களது நடனத்தைப் பார்ப்பதற்காகவே உலகின் பல பாகங்களிலும் இருந்து இந்த நாட்களில் இங்கு பலர் வருவர்.

இந்த 2025 ஆம் ஆண்டு இவர்களுக்கு நுாறாவது ஆண்டாகும் இன்னும் பல நுாற்றாண்டு காண வாழ்த்துக்கள்.

-எல்.முருகராஜ்

Advertisement