அமெரிக்காவில் 10 மாதங்களில் 80,000 விசாக்கள் ரத்து
வாஷிங்டன் : அமெரிக்காவில், டொனால்டு டிரம்ப் அதிபராக பதவியேற்றதில் இருந்து இதுவரை, 80,000க்கும் மேற்பட்ட விசாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபராக கடந்த ஜனவரியில் டிரம்ப் இரண்டாவது முறை பதவியேற்றார். குடியேற்றம் தொடர்பாக பல கடுமையான கட்டுப்பாடுகளை அவர் அறிவித்தார். விசாக்களுக்கான நடைமுறைகள் கடுமையாக்கப்பட்டன.
இந்நிலையில், கடந்த 10 மாதங்களில் மட்டும், மாணவர், சுற்றுலா, தற்காலிக பணிக்காக வரும் குடியேற்றம் அல்லாத, 80,000க்கும் மேற்பட்ட விசாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.இதில் பாதிக்கும் மேற்பட்டவை, மூன்று முக்கிய காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்டுள்ளன. மது அருந்தி வாகனம் ஓட்டியதாக 16,000 விசாக்களும், தாக்குதல் போன்ற காரணங்களுக்காக 12,000 விசாக்களும் மற்றும் திருட்டு வழக்கில் சிக்கிய காரணத்தால் 8,000 விசாக்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மேலும், காலாவதியான மற்றும் சட்ட மீறல்களுக்காக 6,000க்கும் மேற்பட்ட மாணவர்களின் விசாக்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதில் காலாவதியானவை எத்தனை என்று சொன்னால் உண்மை தெரியும். குற்றம் செய்தவர்கள் இதில் அடக்கமே தவிர அவர்கள்தான் அதிகம் என்றெல்லாம் சொல்லி விட முடியாது.
பிழைக்க போற இடத்தில கையை காலை வைத்து கொண்டு சும்மா இருக்கனும்
அவர்கள் குறிப்பிட்ட காரணங்கள் உண்மையென்றால் விசா மறுக்கப்படவேண்டியதுதான்.மேலும்
-
ஓட்டுக்கு பணம் கொடுப்பவர் பாவி; காசுக்கு ஓட்டு போடுபவர் தேசத்துரோகி; சாபமிடுகிறார் சீமான்
-
'குட்கா' பறிமுதல்
-
துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணனுடன் புதுச்சேரி பல்கலை., துணைவேந்தர் சந்திப்பு
-
காவல் உதவி செயலி பதிவிறக்கம் செய்தோர் 13.35 லட்சம் பேர்; பயன்படுத்துவோர் 8.45 லட்சம் பேர்
-
ஜேஎன்யு மாணவர் தேர்தல்: இடதுசாரி மாணவர் அமைப்பு வெற்றி
-
ரத்தத்தில் சர்க்கரை அளவை எளிதாக அறிய சென்னை ஐ.ஐ.டி.,யில் புதிய கருவி உருவாக்கம்