காவல் உதவி செயலி பதிவிறக்கம் செய்தோர் 13.35 லட்சம் பேர்; பயன்படுத்துவோர் 8.45 லட்சம் பேர்
சென்னை: 'காவல் உதவி செயலி அறிமுகம் செய்யப்பட்டு, ஆறு ஆண்டுகளான போதிலும், 13.35 லட்சம் பேர் தான் பதிவிறக்கம் செய்துள்ளனர். அவர்களில், 8.45 லட்சம் பேர் தான் பயன்படுத்தி உள்ளனர். இது சமூக வலைதளங்களுக்கு தரப்படும் முக்கியத்துவத்தை விட குறைவு' என, போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள், 52 சதவீதம் அதிகரித்து உள்ளன. இரு தினங்களுக்கு முன், கோவையில் கல்லுாரி மாணவி பாலியல் வன்முறை செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.
இதுபோன்ற ஆபத்தான நேரங்களில், பெண்கள், குழந்தைகள், மூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கு, உடனடியாக போலீசாரின் உதவி கிடைக்க, தமிழக காவல் துறை, 2019ல், 'காவலன் எஸ்.ஓ.எஸ்.,' என்ற மொபைல் போன் செயலியை அறிமுகம் செய்தது. பின், இச்செயலி, 'காவல் உதவி' என, பெயர் மாற்றப்பட்டது.
இச்செயலி அறி முகம் செய்யப்பட்டு, ஆறு ஆண்டுகள் ஆன போதிலும், 13.35 லட்சம் பேர் தான் பதிவிறக்கம் செய் துள்ளனர். அவர்களிலும், 8.45 லட்சம் பேர் தான் பயன்பாட்டில் வைத்துள்ளனர்.
அவர்கள் மேலும் கூறியதாவது:
தமிழகத்தில், 3.60 கோடிக்கும் அதிகமாக பெண்கள் உள்ளனர். இவர்களில், 90 சதவீதம் பேரிடமாவது, 'ஸ்மார்ட்' போன்கள் இருக்கும்.
பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த காவல் உதவி செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் என, விழிப்புணர்வு செய்த போதிலும், சமூக வலைதளங்களுக்கு தரும் முக்கியத்துவத்தை, இச்செயலிக்கு தர ஆர்வம் காட்டாமல் உள்ளனர். ஆபத்து நேரத்தில், காவல் உதவி செயலி பதிவிறக்கம் செய்யப்பட்ட, ஸ்மார்ட் போனை, வலது, இடது என, மூன்று முறை 'ேஷக்' செய்தாலே போதும், ஜி.பி.எஸ்., கருவி திறக்கப்பட்டு, சென்னையில் உள்ள அதிநவீன காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பு வந்து விடும்.
காவல் உதவி செயலி, ஆபத்தில் இருக்கும் நபர் எத்தகைய சூழலில் உள்ளார் என்பதை, 15 வினாடிகளில் வீடியோ எடுத்து, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பி விடும்.
இணைய வசதி, மொபைல் போன் டவர் கிடைக்காத இடமாக இருந்தாலும், அந்த இடத்தில் இருந்து, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு குறுஞ்செய்தி வந்து விடும்.
மேலும், ஆபத்தில் இருக்கும் நபர் குறித்து, அவரின் நலன் விரும்பிகள் மூன்று பேருக்கு தகவலும் சென்று விடும். காவல் உதவி செயலி வாயிலாக அழைப்போ, குறுஞ்செய்தியோ கிடைத்த அடுத்த வினாடியே போலீசார் செயல்பட துவங்கிடுவர். ஆபத்தில் இருக்கும் நபர் இருக்கும் பகுதிக்கு, அருகே உள்ள போலீசார் அனுப்பி வைக்கப்படுவர். இப்பணிகளை எல்லாம் போலீஸ் அதிகாரிகள் கண்காணிப்பர்.
பெண்கள், ஆண்கள் என, எல்லாரிடமும் காவல் உதவி செயலி இருக்க வேண்டியது கட்டாயம். ஸ்மார்ட் போன் வசதி இல்லாத நபர்கள், '100, 112, 101' என்ற எண்களுக்கு அழைத்தால் போதும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
தங்கத்தின் மதிப்பு உயர உயர பெண்களின் மதிப்பும் மரியாதையும் குறைந்து கொண்டே செல்கிறது. குடும்ப தலைவன் உழைத்து கொடுப்பான் குடும்ப தலைவி வீட்டையும் குழந்தைகளையும் கவனித்துக் கொள்வார்கள்..
ஆனால் இன்று யாரும் நல்லதை சொன்னால் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் தான்தோன்றி தனமாக சுற்றி வீட்டுக்கும் நாட்டுக்கும் கெட்ட பெயர் உண்டாகி விடுவது வழக்கமாகிவிட்டது.
8.4 லட்சம் மக்கள் பயன்படுத்தி உள்ளார்கள் என்றால் அது கொடுமை சாமி. அந்த அளவிற்கு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு போய் கிடக்கு அறிவிலிகளா.மேலும்
-
தொடரை வெல்லுமா இந்தியா * இன்று ஐந்தாவது 'டி-20' மோதல்
-
இந்திய ஹாக்கி நுாற்றாண்டு விழா * ஜூனியர் கோப்பையை பெற்றார் உதயநிதி
-
உலக செஸ்: அர்ஜுன், பிரனவ் வெற்றி
-
இந்திய பவுலர்கள் அபாரம் * மூன்று விக்கெட் சாய்த்த பிரசித்
-
ஸ்குவாஷ்: அரையிறுதியில் ராதிகா
-
இந்தியாவில் இருந்து வந்த அழைப்பு தான் ஷேக் ஹசீனாவின் உயிரை காப்பாற்றியது: வன்முறை குறித்த புத்தகத்தில் தகவல்