உலக விளையாட்டு செய்திகள்
அல்காரஸ்-ஜோகோவிச் மோதல்
டுரின்: இத்தாலியில், ஏ.டி.பி., பைனல்ஸ் டென்னிஸ் வரும் நவ. 9-16ல் நடக்கிறது. இதில் ஸ்பெயினின் அல்காரஸ், செர்பியாவின் ஜோகோவிச், அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ், ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார் ஒரே பிரிவில் இடம் பெற்றுள்ளனர். இதேபோல இத்தாலியின் சின்னர், ஜெர்மனியின் ஸ்வெரேவ், அமெரிக்காவின் ஷெல்டன் ஒரே பிரிவில் உள்ளனர்.
பைனலில் வட கொரியா
ரபாட்: மொராக்கோவில், பெண்கள் (17 வயது) உலக கோப்பை கால்பந்து 9வது சீசன் நடக்கிறது. அரையிறுதியில் வட கொரியா அணி 2-0 என, பிரேசிலை வீழ்த்தியது. மற்றொரு அரையிறுதியில் நெதர்லாந்து அணி 1-0 என, மெக்சிகோவை வென்றது. பைனலில் (நவ. 8) வட கொரியா, நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன.
பிரான்ஸ் பிரமாதம்
அல் ரய்யான்: கத்தாரில், 17 வயதுக்கு உட்பட்டோருக்கான 'பிபா' உலக கோப்பை கால்பந்து 20வது சீசன் நடக்கிறது. லீக் போட்டியில் பிரான்ஸ் அணி 2-0 என சிலியை வீழ்த்தியது. மற்றொரு போட்டியில் கனடா அணி 2-1 என உகாண்டாவை தோற்கடித்தது. ஆஸ்திரிய அணி 1-0 என, சவுதி அரேபியாவை வென்றது.
ஜப்பான் கலக்கல்
ஒஸ்கெமென்: கஜகஸ்தானில், பெண்களுக்கான ஆசிய ஐஸ் ஹாக்கி சாம்பியன்ஷிப் 2வது சீசன் நடக்கிறது. இதன் லீக் போட்டியில் ஜப்பான் அணி 6-0 என்ற கோல் கணக்கில் கஜகஸ்தானை தோற்கடித்தது. மற்றொரு லீக் போட்டியில் சீன அணி 3-2 என, 'பெனால்டி ஷூட் அவுட்' முறையில் தென் கொரியாவை வீழ்த்தியது.
எக்ஸ்டிராஸ்
* சவுதி அரேபியாவில், ஆசிய கோப்பை வில்வித்தை 'ஸ்டேஜ்-3' நடக்கவுள்ளது. இதற்கான இந்திய அணிக்கு ('காம்பவுண்டு') ஷீத்தல் தேவி தேர்வானார். இதன்மூலம் மாற்றுத்திறனாளி அல்லாத பிரிவில் விளையாட தகுதி பெற்ற முதல் இந்திய பாரா வில்வித்தை நட்சத்திரமானார்.
* பிரிமியர் லீக் 'டி-20' தொடருக்கான பெங்களூரு அணியின் தலைமை பயிற்சியாளராக, முன்னாள் தமிழக சுழற்பந்துவீச்சாளர் மலோலன் ரங்கராஜன் 36, நியமிக்கப்பட்டார். இவர், கடந்த சீசனில் துணை பயிற்சியாளராக இருந்தார்.
* கோவாவில் நடக்கும் சூப்பர் கோப்பை கால்பந்து தொடருக்கான லீக் போட்டியில் ராஜஸ்தான், ஸ்போர்டிங் டில்லி அணிகள் மோதின. விறுவிறுப்பான இப்போட்டி 2-2 என 'டிரா' ஆனது.
* ஜெர்மனியில் நடக்கும் 'டபிள்யு.டி.டி., சாம்பியன்ஸ்' டேபிள் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில் இந்திய வீராங்கனை மணிகா பத்ரா 0-3 (5-11, 5-11, 7-11) என ஜெர்மனியின் அன்னெட் காப்மேனிடம் தோல்வியடைந்தார்.
* தென் ஆப்ரிக்க டெஸ்ட் தொடருக்கு தயாராக, ரஞ்சி கோப்பை தொடருக்கான மும்பை அணியில் இருந்து ஜெய்ஸ்வால் விடுவிப்பு. இவருக்கு பதிலாக துவக்க வீரர் ஆயுஷ் மாத்ரே தேர்வானார்.
மேலும்
-
ஓட்டுக்கு பணம் கொடுப்பவர் பாவி; காசுக்கு ஓட்டு போடுபவர் தேசத்துரோகி; சாபமிடுகிறார் சீமான்
-
'குட்கா' பறிமுதல்
-
துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணனுடன் புதுச்சேரி பல்கலை., துணைவேந்தர் சந்திப்பு
-
காவல் உதவி செயலி பதிவிறக்கம் செய்தோர் 13.35 லட்சம் பேர்; பயன்படுத்துவோர் 8.45 லட்சம் பேர்
-
ஜேஎன்யு மாணவர் தேர்தல்: இடதுசாரி மாணவர் அமைப்பு வெற்றி
-
ரத்தத்தில் சர்க்கரை அளவை எளிதாக அறிய சென்னை ஐ.ஐ.டி.,யில் புதிய கருவி உருவாக்கம்